திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ரஜினியையே ஆட்டம் காண வைத்த மலையாள நடிகர்.. ஜெயிலரில் ஸ்கோர் செய்த ஒத்த சிங்கம்

Jailer Movie: ஜெயிலர் படத்திற்கு டிக்கெட் கிடைக்காத நிலைதான் தற்போது ஏற்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு மாசாக என்ட்ரி கொடுத்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஒருபுறம் ரஜினி ரசிகர்கள் ஜெயிலர் படத்தை கொண்டாட மற்றொருபுறம் மோசமான விமர்சனங்களும் வந்து கொண்டு தான் இருக்கிறது.

ஆனாலும் ரஜினியின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் ரஜினிக்கு அடுத்தபடியாக கவனம் ஈர்த்த நடிகர் ஒருவர் இருக்கிறார். அதாவது ஜெயிலர் படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார் மற்றும் ஜாக்கி ஷெராப் ஆகியோர் வில்லனாக நடித்திருந்தனர். இவர்கள் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கனகச்சிதமாக செய்திருந்தனர்.

Also Read : மண்ட மேல இருக்குற கொண்டையை மறந்த நெல்சன்.. ஓவர் வன்முறையால் ரசிக்க முடியாமல் போன ஜெயிலர்

இவர்களை காட்டிலும் ஒத்த சிங்கமாக மிரள வைத்திருந்தார் மலையாள நடிகர் விநாயகன். விஷால் நடிப்பில் வெளியான திமிரு படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் வலது கையாக ஊனமுற்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதன் பிறகு சிம்புவின் சிலம்பாட்டம் மற்றும் தனுஷின் மரியான் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

ஆனாலும் இந்த படங்களில் அவருக்கு வரவேற்பு கிடைக்காத நிலையில் ஜெயிலர் படத்தில் நெல்சன் விநாயகனை சரியாக பயன்படுத்தி இருக்கிறார். அதிலும் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு வித்தியாச வில்லனாக ஜெயிலர் படத்தில் பார்க்க முடிகிறது. அவரைப் பற்றி தான் இப்போது மொத்த சினிமாவும் பேசி வருகிறது.

Also Read : ஐட்டம் பாட்டுக்கு இத்தனை கோடியா.? ஜெயிலர் படத்துக்காக தமன்னா வாங்கிய சம்பளம்

மலையாள சினிமாவில் இவர் பிரபல வில்லன் நடிகராக இருந்தாலும் தமிழில் இவருக்கு ஸ்கோப் பெரிய அளவில் கிடைக்கவில்லை. ஆனால் ஜெயிலர் படம் மூலம் இவருக்கு அடுத்தடுத்த வில்லன் கதாபாத்திரங்களுக்கான வாய்ப்பு நிச்சயம் வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மேலும் தமிழில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்த வரும் நடிகர் சென்ராயனின் உறவினர் தான் விநாயகன். உறவு முறையில் சென்ராயனுக்கு அண்ணன் முறையாம். அதனால்தான் அவருடைய முகம் பாவனை விநாயகனுக்கு ஒத்துப் போகிறது. மேலும் இனி வில்லனாக தமிழ் சினிமாவில் கலக்க வருகிறார் விநாயகன்.

Also Read : கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கிய நெல்சன்.. ஜெயிலர் படத்தில் இருக்கும் நிறை, குறைகள்

Trending News