Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

தளபதி 69-இல் இணைந்த 23 வயது இளம் நடிகை.. இப்பதான் மறக்க முடியாத ஒரு படத்துல நடிச்சாங்க

தளபதி 69-இல் இணைந்த 23 வயது இளம் நடிகை.. இப்பதான் மறக்க முடியாத ஒரு படத்துல நடிச்சாங்க

விஜய்யின் கடைசி படமான தளபதி 69ல் களமிறங்கப்போகும் நடிகர் நடிகைகள் யார் யார் என்பது குறித்து அப்டேட்டை ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக கேட்டு வருகின்றனர். ரசிகர்களை திருப்தி படுத்தும் வகையில், அப்டேட்களை அள்ளி வீசி வருகிறது தயாரிப்பு நிறுவனம். […]

விஜய்யின் கடைசி படமான தளபதி 69ல் களமிறங்கப்போகும் நடிகர் நடிகைகள் யார் யார் என்பது குறித்து அப்டேட்டை ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக கேட்டு வருகின்றனர். ரசிகர்களை திருப்தி படுத்தும் வகையில், அப்டேட்களை அள்ளி வீசி வருகிறது தயாரிப்பு நிறுவனம்.

தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கிய விஜய், “கோட்” படத்துக்கு பிறகு ஏற்கனவே ஒப்புக்கொண்ட எச்.வினோத்தின் படத்தில் மட்டுமே நடிக்கப்போவதாகவும், அதன்பிறகு சினிமாவில் நடிக்க போவதில்லை என்று ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இதையடுத்து உலகில் உள்ள ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் தற்போது விஜயின் கடைசி படமான ‘தளபதி 69’ மீதுதான் உள்ளது. விஜய்யின் கடைசி படம் என்பதால் நிச்சயம் மாஸ் வேற லெவலில் இருக்கும், அதே போல் படத்தில் நட்சத்திர பட்டாளங்கள் ஏராளம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், கேஸ்டிங்கை பார்த்து பார்த்து தேர்வு செய்து வருகின்றது பட குழு.

இந்த நிலையில், சமீபத்தில், பான் இந்தியா வில்லன் பாபி தியோல் தளபதி-க்கு வில்லனாகிறார் என்ற தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், தற்போது, முக்கியமாக இந்த படத்தில் beast படத்தின் சென்சேஷன் நடிகை, பூஜா ஹெக்டே இணைந்துள்ளார். மேலும், முக்கியமான வேடத்தில் ஒரு க்யூட்டிப்பை நடிகையும் நடிக்கிறார்.

mamitha-baiju

மலையாளத்தில் வெளியான ப்ரேமலு பட நடிகை மமிதா பைஜுக்கு இங்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாககி விட்டனர். இந்த நிலையில், ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட மாதிரியே, மமிதா நடிக்கவிருக்கிறார்.

குறிப்பாக, பூஜா ஹெக்டே விஜய் ஜோடி பொருத்தம் மிகவும் அருமையாக இருக்கும் என்றும் ரசிகர்கள் சொல்லி வர, மமிதா என்ன கதாபாத்திரத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.