வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

ராஜ்கமல் பிலிம்ஸ்க்கு சென்ற தூது..போன் போட்டு கமலிடம் மம்முட்டி போட்ட போடு

Kamal Haasan- Mammootty: மலையாளம் திரை உலகின் சூப்பர் ஸ்டார் மம்முட்டியும், உலகநாயகன் கமலஹாசனும் நெருங்கிய நண்பர்கள். இருப்பினும் இருவரும் இதுவரை இணைந்து ஒரு படம் கூட நடித்ததே கிடையாது. இதை குறித்து விக்ரம் படத்தின் ப்ரோமோஷனுக்கு கொச்சி சென்ற போது கமலிடம் கேட்டதும், அதற்கு அவர் இருவரும் இணைந்து படம் பண்ணுவதற்கு நான் மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும், விரைவில் இருவரும் இணைந்து நடிப்போம் என கூறினார்.

மம்முட்டியின் மகனான துல்கர் சல்மானுக்கு நிறைய திரைப்படங்கள் தமிழில் கிடைக்க வேண்டுமென அவரது தந்தைக்கு ஆசை. துல்கர் மலையாளம் மட்டும் இல்லாமல் தமிழிலும் வளர வேண்டும் என்று அவர் நினைக்கின்றார். துல்கருக்கு தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கின்றது. இருப்பினும் அவருக்கு சரியாக தமிழல்  வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருந்தாலும் இவருக்கு பெண் ரசிகர்களும் அதிகமாக இருக்கின்றனர்.

Also Read:மாமன்னன் வெற்றியால் வடிவேலு போட்ட மாஸ்டர் பிளான்.. ஒரு படத்திற்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

துல்கர் சல்மான் தமிழில் நித்தம் ஒரு வானம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். அதிலும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. டீன் ஏஜ் ரசிகர்களை கவரும் வகையில் இருந்தது. ஹே சினாமிகாவும் இதே போன்று தான், பிறகு தெலுங்கில் வெளியான “சீதாராமம்” திரைப்படம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. அந்த திரைப்படத்தின் மூலம் தனது நடிப்பால் அணைத்து ரசிகர்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்தார்.

Also Read:ஒரே படத்தில் ஒரேடியாக உயர்ந்த லோகேஷ், நெல்சனின் சம்பளம்.. இதுக்கு தான் பெரிய இடத்து சகவாசம் வைக்கணும் போல

மம்மூட்டி கமலிடம் தொலைபேசியில் தனது மகனை பற்றி , “சீதாராமம்” திரைப்படத்திற்கு பிறகு தமிழில் இதுவரை துல்கருக்கு எந்த திரைப்படமும் இன்னும் சரியாக ஓடவில்லை என்று கூறிவிட்டு. விளையாட்டாக அதனால் நீங்கள் தான் உங்களது ராஜ்கமல் ஃபிலிம்ஸ்சில் இருந்து ஏதாவது ஹிட் துல்கருக்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டார்.

அதற்குப் பிறகு ஹெச் வினோத்திடமும், லோகேஷ் கனகராஜ் இடமும் சொல்லி துல்கருக்கு ஒரு படம் பண்ணுமாறு கேட்டுள்ளார். கமலஹாசனும் மம்மூட்டியும் நல்ல நண்பர்கள் இப்படியாக தொலைபேசியில் பேசுவது இவர்களுக்கு இடையே நடக்கும் வாடிக்கையான விஷயம் தான். இருப்பினும் மம்முட்டி தன் மனதில் நினைத்ததை கமலிடம் கேட்டுவிட்டார்.

Also Read:சாரு பாலாவை ரூட்டு விடும்போது மட்டும் இனிச்சுதோ.. பொண்டாட்டிய பொண்ணு கேட்டதால் கதறிய அழுத குணசேகரன்

அதற்கு கமலஹாசனும் தாராளமாக பண்ணலாம் விரைவில் துல்கர், ராஜ்கமல் ஃபிலிம்ஸ்சில் ஒரு திரைப்படம் நடிப்பார் என்று கூறியதாகவும், அதுமட்டுமில்லாமல் நீங்கள் சொன்னது போல் நான் இயக்குனர்களிடம் இது குறித்து சொல்வதாகவும் சொல்லியிருக்கிறார் . அதனால் இப்பொழுது கமல் துல்கருக்கு கண்டிப்பாக படம் பண்ணும் முடிவில் இருப்பதாகவும் செய்திகள் பரவியது.

கூடிய விரைவில் கமலஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் உடன் துல்கர் இணைந்து படம் பண்ணுவதை எதிர்பார்க்கலாம். தமிழில் ரசிகர்கள் துல்கருக்கு அதிகமாக இருப்பதினால் விரைவில் தமிழில் முழு நேர ஹீரோவாக மாறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது .

Trending News