அஜித் தற்போது விடாமுயற்சி படப்பிடிப்பில் உள்ளார். இன்னும் 2 நாட்கள் படப்பிடிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. அதற்க்கு பின் ஒரு சில patch work வேலையெல்லாம் முடித்துவிட்டு, அஜித் குட் பேட் அக்லீ படத்தின் டப்பிங் பணியில் ஈடுபட உள்ளார்.
இப்படி இருக்க, வெங்கட் பிரபு தல ரசிகர்கள் வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது போல ஒரு அப்டேட் கொடுத்துள்ளார். வெங்கட் பிரபு கோட் படத்துக்கு பின், எந்த படம் எடுக்கப்போகிறார் என்ற கேள்வி பல நாட்களாகவே உள்ளது.
ஒரு புறம் சிவகார்த்திகேயனை வைத்து தான் படம் பண்ணபோகிறார் என்று செய்திகள் வெளியாக மறுபுறம், இல்லை அவர் சிம்புவுடன் இணையப்போகிறார் என்றும் செய்திகள் வருகிறது.
இப்படி பட்ட சூழ்நிலையில் தான் தற்போது வெங்கட் பிரபு அடுத்ததாக தல அஜித்துடன் இணைய போகிறார் என்ற செய்தி பரவி வருகிறது.
மங்காத்தா 2 வரப்போகுது
வெங்கட் பிரபு முதலில் சிவகார்த்திகேயன் படத்தை எடுத்து முடித்து ரிலீசுக்கு தயார் செய்த பின், அஜித்துடன் கூட்டணி போட உள்ளார். அதற்குள் அவரும் ரேஸிங் எல்லாவற்றையும் முடித்துவிட்டு வந்துவிடுவார்.
அந்த காலகட்டத்தை சரியாக பயன்படுத்தி சிவகார்த்திகேயனை வைத்து படத்தை வருகிற, பிப்ரவரி மாதத்துக்கு பின் தொடங்கி, ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்க போகிறார்.
ஆனால் சிவகார்த்திகேயன் 3 படங்கள் ரவுண்டு கட்டிக்கொண்டு இருக்கும் தருவாயில், எப்படி வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பார், அவருக்கு எங்கு நேரம் இருக்கும் என்ற சந்தேகமும் வந்துள்ளது.
ஆனால் படத்தை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்று வெங்கட் பிரபு மும்முரமாக இருக்கிறார். அப்படி படத்தை முடித்துவிட்டு, அஜித்தை வைத்து படம் எடுக்க இருக்கிறார்.
நிச்சயமாக இந்த படம் மங்காத்தா 2 படமாக தான் இருக்கும் என்று அவருக்கு நெருங்கிய வட்டத்தின் கூறுகின்றனர். அப்படி நடந்தால் ரசிகர்கள் கொண்டாடி தியேட்டரையே கொளுத்தி விடுவார்கள்.