வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

நிக்சனைப் போல் விதியை மீறிய மணி.. கண்டுக்காமல் போன பிக்பாஸ், காரணம் இதுதான்

Biggboss 7: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடைபெற்றது. அதில் விஜய் வர்மா, அர்ச்சனாவை தவிர மற்ற அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதில் சில போங்காட்டமும் நடந்தது. ஆனால் பிக்பாஸ் அதை கண்டும் காணாமல் சென்றார்.

அந்த வகையில் போர்டில் கையை எடுக்காமல் வைத்திருக்க வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் இரண்டு பிரிவுகளாக பிரிந்து போட்டியாளர்கள் விளையாட தொடங்கினர். முடிந்த அளவுக்கு கடுமையாக விளையாடி வந்த ஹவுஸ் மேட்ஸ் நேரம் போகப் போக சோர்வடைய ஆரம்பித்தனர்.

அதிலும் நிக்சன் கை வலி தாங்க முடியாமல் லேசாக கையை நகர்த்தி வைத்தார். அதை கண்கொத்தி பாம்பாக கவனித்த பிக்பாஸ் உடனே அவரை ஆட்டத்தை விட்டு வெளியேற்றினார். அதே போல் தான் மணியும் கை வலியின் காரணமாக ஒவ்வொரு விரலாக எடுத்து எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.

Also read: மாயா, கமலுக்காக விஜய் டிவி செய்த மட்டமான வேலை.. பிக்பாஸை விட்டு வெளியேறும் பலி ஆடு, ஓட்டிங் லிஸ்ட்

ஆனால் அவரை மட்டும் பிக்பாஸ் ஒன்றும் சொல்லவில்லை. இது எந்த விதத்தில் நியாயம் என இப்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. உண்மையில் நிக்சன் முழுதாக கையை எடுத்து பிறகு வைத்தார். ஆனால் மணி விரலை மட்டும் அசைத்தார்.

எப்படி இருந்தாலும் இதுவும் விதிமீறல் தான். ஆனால் இதை மட்டும் பிக்பாஸ் கண்டும் காணாமல் இருந்து விட்டார் அதன்படி இந்த டாஸ்கின் முடிவில் ரவீனா 5 பாயிண்ட் பெற்றார். அதற்கு அடுத்ததாக மணி 4 பாயிண்ட்டுகளை பெற்றார். இப்படி சூடு பிடிக்கத் தொடங்கிய ஆட்டத்தில் விஷ்ணு தான் அதிக பாயிண்ட் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Also read: வருட கடைசியில் டிஆர்பி-யில் அடித்து நொறுக்கிய டாப் 6 சீரியல்கள்.. அரையிறுதியில் ஆட்டம் காட்டிய சிங்கப்பெண்

Trending News