புதன்கிழமை, ஜனவரி 22, 2025

அர்ச்சனாவுக்கு டஃப் கொடுக்கும் மணி.. ஓட்டை பிரிக்க சில்லறை வேலை பார்த்த ரத்த உறவு

Biggboss 7: ஒரு வழியாக பிக்பாஸ் சீசன் 7 முடிவுக்கு வர இருக்கிறது. கடந்த சில மாதங்களாக ஏகப்பட்ட சர்ச்சைகள், பஞ்சாயத்துகள், மன உளைச்சல் என இந்நிகழ்ச்சி சோசியல் மீடியாவில் பெரும் வைரலானது. இதில் ஆண்டவர் பெயர் கூட டேமேஜ் ஆனது.

ஆனாலும் எப்படியோ இந்த சீசன் இறுதி நாளை நெருங்கி இருக்கிறது. அதன்படி தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் மாயா, அர்ச்சனா, மணி, விஜய் வர்மா, தினேஷ், விஷ்ணு ஆகியோர் இருக்கின்றனர். இதில் அர்ச்சனாவுக்கு தான் அதிகபட்ச ஆதரவு இருக்கிறது.

அவருக்கு அடுத்த இடத்தில் மணி இருக்கிறார். இதை வைத்து பார்க்கும் போது டைட்டில் வின்னர் அர்ச்சனா என்றும் ரன்னர் மணி என்றும் யூகிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் விஜய் டிவி மாயாவை வெற்றியாளராக அறிவிக்கும் திட்டத்திலும் இருக்கிறார்களாம்.

Also read: சேர்க்கை சரியில்ல, ட்விஸ்ட் வைத்த பிக்பாஸ்.. 95 நாள் தாக்கு பிடித்த விசித்ராவின் மொத்த சம்பளம் இதுதான்

இந்நிலையில் அர்ச்சனாவின் தங்கை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை போட்டு இருந்தார். அதில் தினேஷ் அர்ச்சனாவை கலாய்த்து பேசியதை பற்றி கமெண்ட் கொடுத்து இருந்தார். அது சரிதான் என்றாலும் மணியின் பெயரையும் அவர் இழுத்துவிட்டது தான் சர்ச்சையாக மாறியிருக்கிறது.

ஏனென்றால் தினேஷ், விஷ்ணு இருவரும் தான் அர்ச்சனாவை கிண்டலடித்து பேசிக் கொண்டிருந்தார்கள். மணி அந்த பேச்சை நிறுத்த தான் முயற்சி செய்தார். அது தெரியாத அர்ச்சனாவின் தங்கை மணியின் மீது பழியை சுமத்தி இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் ஓட்டுக்காக இப்படி சில்லறை வேலை பார்க்கிறீர்களா என ரோஸ்ட் செய்து வருகின்றனர்.

அதைத்தொடர்ந்து அர்ச்சனாவின் தங்கை தற்போது அந்த போஸ்டை நீக்கி இருக்கிறார். ஏற்கனவே அர்ச்சனாவை ஜெயிக்க வைக்க பல வேலைகள் நடைபெற்று வருகிறது. இதில் அவருடைய தங்கையும் மணி ஜெயித்து விடுவாரோ என்ற எண்ணத்தில் தேவையில்லாததை பேசி வாங்கி கட்டி இருக்கிறார்.

Also read: கைத்தட்டலால் அர்ச்சனாவுக்கு ஏறிய தலைக்கனம்.. கடைசி வரை பதட்டத்திலேயே வைத்திருக்கும் பிக்பாஸ்

Trending News