புதன்கிழமை, ஜனவரி 15, 2025

வந்தியத்தேவன் மீது வழக்கு பதிந்த வழக்கறிஞர்.. என்னப்பா இது மணிரத்னத்திற்கு வந்த சோதனை

இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் பாகம்1 திரைப்படம், சமீபத்தில் உலகமெங்கும் உள்ள பல திரையரங்குகளில் பேன் இந்தியா திரைப்படமாக வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது. கல்கியின் நாவலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில், குந்தவை, ஆதித்த கரிகாலன், நந்தினி, வந்தியதேவன், அருள்மொழிவர்மன் என பல முக்கியமான கதாபாத்திரங்கள் உள்ளன.

இதில் வந்தியதேவன் கதாபாத்திரம் மிக முக்கியமானதாக பொன்னியின் செல்வன் நாவலில் எழுதப்பட்டுள்ளது. இதனை மையமாகக் கொண்டு இக்கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தியை நடிக்க வைத்து அசத்தினார் மணிரத்னம். தற்போது கார்த்தியின் வந்தியதேவன் கதாபாத்திரம் மீதே பிரபல வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடுத்துள்ளார்.

Also Read : விக்ரம் படத்தை பின்னுக்கு தள்ளிய பொன்னியின் செல்வன்.. முதல் நாளே கோடிகளை குவித்து வசூல்

அந்த வழக்கில் வந்தியதேவன் கதாபாத்திரத்தை பொருத்தவரை பெண்களை ரசிக்கும் கதாபாத்திரம் தான், ஆனால் வந்தியதேவன் மாபெரும் வீரன். அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை பெண்கள் மீது மட்டுமே அதிக ஈர்ப்பு உள்ள வந்தியத்தேவனாக, சற்று ஓவராக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மணிரத்னம் காண்பித்துள்ளார் என்று அவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதனிடையே பிரபல வழக்கறிஞர் சார்லஸ் என்பவர் வந்தியதேவன் கதாபாத்திரத்தை மணிரத்னம் தவறாக சித்தரித்துள்ளதாக வழக்கு தொடுத்துள்ளார் . படம் வெளியாகி இரண்டே நாட்களில் கிட்டத்தட்ட 150 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்து, தமிழ் சினிமாவில் முதல் திரைப்படம், இரண்டு நாட்களில் இவ்வளவு வசூல் என்ற பெருமையைப் பெற்றுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இந்த வழக்கு பெரும் சோதனையாக பார்க்கப்படுகிறது.

Also Read : கார்த்தி, மணிரத்னத்துடன் உதவி இயக்குனராக வேலை செய்த 3 படங்கள்.. அசால்டாக சமாளிக்கும் வந்தயத்தேவன்

மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் வழக்குப் போட வேற குற்றமே இல்லையா என பலரும் விமர்சித்து வருகின்றனர். கார்த்தியின் வந்தியதேவன் கதாபாத்திரம் ரசிகர்களை ஈர்த்துள்ள நிலையில் இப்படிப்பட்ட வழக்குப்பதிவு தேவையற்றது என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

ஒரு பிரம்மாண்டமான திரைப்படம் எடுக்கப்படும் என்றால், அதற்கான எதிர்ப்புகள் பல கிளம்பும் வாய்ப்பு தற்போதைய சூழலில் அமைந்துள்ளது. இந்நிலையில் வந்தியதேவன் கதாபாத்திரம் மேல் தொடுக்கப்பட்டுள்ள வழக்கை மணிரத்னம் எப்படி அணுகுவார் என்ற பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Also Read : வசூல் வேட்டையில் பொன்னியின் செல்வன்.. முதல் நாள் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?

Trending News