திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கமலிடம் மாட்டி முழிக்கும் மணிரத்தினம்.. சிக்கலில் தவிக்கும் THUG LIfe

Kamal in Thug Life: சும்மா போற போக்குல ஒரு படத்தை கொடுக்கலாம் என்று இருப்பவர்களுக்கு மத்தியில் கதையில் தனித்துவம் காட்ட வேண்டும் என்று நினைக்கக் கூடியவர் கமல். அப்படி அவர் நடித்த படங்கள் ஒரு முறை பார்க்கும் பொழுது புரியாத புதிராக தான் இருக்கும். ஆனால் காலப்போக்கில் அந்த படத்திற்கான மகத்துவம் புரிந்து கொண்டாட ஆரம்பித்து விடுவோம். ஆனாலும் இவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வசூலில் லாபம் பெறாது.

இதையெல்லாம் ஓரங்கட்டும் வகையில் இரண்டு வருடங்களுக்கு முன் லோகேஷ் உடன் இணைந்து விக்ரம் படத்தில் நடித்ததன் மூலம் இன்டஸ்ட்ரியல் ஹிட் அடித்து வசூல் அளவில் லாபத்தை பார்த்து மிரட்டி விட்டார். இதற்கிடையில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையிலும் ரிலீஸ் ஆகாமல் இழுவையில் இழுத்தடிக்கிறது.

இதனைத் தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் இவருடைய 234 ஆவது படமான தக் லைஃப் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதில் கமலுடன் திரிஷா மற்றும் நயன்தாரா இணைந்து நடிக்கிறார்கள். மேலும் 35 வருடங்களுக்குப் பிறகு கமல் மற்றும் மணிரத்தினத்தின் கூட்டணியில் படம் உருவாகுவதால் பெரிய சம்பவத்தை ஏற்படுத்தும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Also read: பாதி கூட நிறையல, காத்து வாங்கிய இருக்கைகள்.. ரஜினி, கமல் வந்தும் வெறிச்சோடி போன கலைஞர் 100

ஆனால் தற்போது மணிரத்தினம் இப்படி தெரியாத்தனமாக கமலிடம் வந்து மாட்டிக் கொண்டோமே என்று முழித்து வருகிறார். அதாவது தக் லைஃப் படத்திற்கான ஷூட்டிங்கை சென்னையில் ஆரம்பிப்பதற்காக செட்டு அனைத்தும் போட்டாச்சு. ஆனால் கமல் இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் என்று இழுத்தடித்து கொண்டு இருக்கிறாராம்.

ஆனால் இன்னும் வரை வந்தபாடாக இல்லை. அதனால் மணிரத்தினம் ஒவ்வொரு நாளும் கமல் வந்து விடுவார் என்று காத்துக் கொண்டிருக்கும் நிலைமையில் தள்ளப்பட்டு விட்டார். கடைசியாக கமல், மணிரத்தினிடம் பொங்கலுக்கு பிறகு சூட்டிங் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறார். ஆனாலும் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து எந்த வித பதிலும் சரியாக வரவில்லையாம்.

இதற்கெல்லாம் காரணம் கமல் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரொம்பவே பிஸியாக இருப்பதால் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து மணிரத்தினத்தை கண்டுகொள்ளாமல் விடுகிறார். இப்படியே போனால் இந்தியன் 2 படம் போலவே தக் லைஃப் படமும் பல வருடங்களாக சிக்கலில் தவித்து விடுமோ என்ற பயத்தில் மணிரத்தினம் இருக்கிறார்.

Also read: ஆஹா! ரஜினி கமல் இடத்திற்கு போட்டியா களமிறங்கும் ஷார்ப் ஹீரோ.. 35 வருடத்திற்கு அப்புறம் தமிழில் போடப்போகும் பட்டறை

Trending News