திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மணிரத்தினம், கமலால் மறந்து போன நடிகர்.. 25 படங்களில் வில்லனாய் பின்னி பிடல் எடுத்த ஹீரோ

Maniratnam-Kamal: நுணுக்கங்களை பயன்படுத்தி மணிரத்னம் இயக்கிய எண்ணற்ற படங்கள் மாபெரும் வெற்றியை கண்டிருக்கிறது. இந்நிலையில் இவர் படத்தில் வாய்ப்பு கொடுக்காததை குறித்து மனவேதனைக்கு உள்ளான நடிகர் பற்றிய தகவலை இங்கு காண்போம்.

அவ்வாறு 2004ல் கமலஹாசன் இயக்கி, நடித்த படம் தான் விருமாண்டி. பாக்ஸ் ஆபிஸ் வசூல் கண்ட இப்படத்தில் நல்லமண நாயக்கராய் களம் இறங்கியவர் நெப்போலியன். இப்படத்தில் எதிர்தரப்பு வாதங்களை முன்வைத்து கமலுக்கு குடைச்சல் கொடுத்த வில்லனாய் தன் நடிப்பினை சிறப்புற வெளிப்படுத்தி இருப்பார்.

Also Read: அரசியலில் இறங்கும் விஜய்.. தண்ணி காட்ட 2 கட்சிகளை உள்ளே இழுக்கும் உதயநிதி

இதேபோன்று சுமார் 25 படங்களில் வில்லனாய் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட இவர் வெளிநாட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார். இது ஒரு புறம் இருந்தாலும், தற்பொழுது மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட வரலாற்று காவியமாய் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க ஆசைப்பட்டதாகவும், எனக்கு வாய்ப்பு கொடுக்க மறந்து விட்டார்கள் எனவும் கூறி வேதனைப்பட்டார் நெப்போலியன்.

மேலும் தமிழ் சினிமாவில் நெப்போலியனின் உடல்வாகுக்கும், கம்பீரமான தோற்றத்திற்கும் அரசர் படங்கள் ஏற்றால் கச்சிதமாய் இருக்கும். ஆகையால் பொன்னின் செல்வன் படத்தில் இவருக்கு வாய்ப்பு கொடுத்திருந்தால், இவர் இந்த கதாபாத்திரத்தை நன்றாக செய்திருப்பார் எனவும் பலர் ஆறுதல் கூறி வருகின்றனர்.

Also Read: இறுதிக்கட்டத்தை நெருங்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.. முல்லையால் ஏற்பட போகும் விடிவுகாலம்

மேலும் கமலுடன் இணைந்து விருமாண்டி படத்தில் டஃப் கொடுத்த வில்லனாய் தன்னடிப்பினை வெளிகாட்டினார் நெப்போலியன். அவ்வாறு இருக்க, கமலும் தன்னை மறந்து விட்டதாக கூறி மன வேதனை பட்டார். இவர் சினிமாவில் இருந்து விலகியதற்கு காரணம் இவர் வெளிநாட்டில் செட்டில் ஆனது தான்.

ஆனால் அது மட்டும் காரணம் அல்ல இவர் போட்ட கண்டிஷனும் தான் காரணமாக கூறப்படுகிறது. 25 படங்களுக்கு மேல் வில்லனாய் நடித்து விட்டேன். இனி வில்லன் அவதாரம் எடுக்க மாட்டேன் நடித்தால் முக்கிய கதாபாத்திரம் தான் நடிப்பேன் என இவர் போட்ட கண்டிஷன் தான் இவருக்கு வாய்ப்பு கிடைக்காத காரணமாகவும் சினிமா வட்டாரங்கள் கூறி வருகிறது.

Also Read: பெண்களை வைத்து பலான தொழில் செய்த முரட்டு நடிகை.. விடிய விடிய நடந்த கூத்தால் அரங்கேறிய சம்பவம்

Trending News