லைக்காவை குழப்பி மொத்த பிளானையும் கெடுத்த மணிரத்தினம்.. ரஜினிக்கு பறிபோன வாய்ப்பு

மணிரத்னம் இயக்கத்தில் லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு ஏகப்பட்ட பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் இத்திரைப்படம் வரலாறு காணாத அளவுக்கு வசூல் வேட்டையும் நடத்திக் கொண்டிருக்கிறது. படம் வெளியான ஒரு வாரத்திற்குள் ஆகவே 300 கோடி வரை வசூலித்து சாதனை படைத்துள்ளது.

இதை பார்த்த லதா ரஜினிகாந்த், சுஹாசினியிடம் மணிரத்தினம் மற்றும் ரஜினி கூட்டணியில் ஒரு படம் பண்ண வேண்டும் என்று கூறியதாக தகவல்கள் வெளியானது. ஆனால் உண்மையில் இந்த விஷயம் இப்போது நடந்தது கிடையாதாம்.

Also read : அடிக்கடி லைக்கா புரொடக்ஷனுக்கு செல்லும் ஐஸ்வர்யா.. கேள்விக்குறியாகும் சிபி சக்கரவர்த்தியின் தலைவர்-170

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த்சாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் செக்கச்சிவந்த வானம். கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப் பட சூட்டிங்கின் போதே லதா ரஜினிகாந்த் சுஹாசினியிடம் இது பற்றி பேசி இருக்கிறார்.

மேலும் லைக்கா நிறுவனமும் மணிரத்னத்தை சந்தித்து ரஜினிகாந்தின் தேதி கிடைத்திருக்கிறது. விரைவில் நாம் ஒரு படத்தை ஆரம்பிக்கலாம் என்று கூறி இருக்கிறது. ஆனால் அப்போது மணிரத்தினம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை எடுக்கும் முயற்சியில் இருந்தார்.

Also read : பயங்கர உற்சாகத்தில் இருக்கும் ரஜினி.. சந்தோஷத்தில் கொடுக்கப் போகும் அடுத்தடுத்த அறிவிப்பு

அதனால் அவர் லைக்காவிடம் இது பற்றி பேசி பொன்னியின் செல்வனை எப்படியாவது திரைப்படமாக உருவாக்கி விட வேண்டும் என்று ஆசை வார்த்தை கூறியிருக்கிறார். இப்படி ஒரு ட்விஸ்ட்டை எதிர்பாராத லைக்கா நிறுவனமும் அதற்கு சம்மதித்திருக்கிறது.

அதன் பிறகு தான் பொன்னியின் செல்வன் உருவாகி தற்போது பல சாதனைகள் புரிந்து கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தால் தான் ரஜினியின் திரைப்படத்தை லைக்காவால் தயாரிக்க முடியாமல் போனது. இருப்பினும் விரைவில் மணிரத்னம் ரஜினியின் கூட்டணி இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read : பொன்னியின் செல்வனை கண்டுக்காத கமல், ரஜினி.. சைலன்டாக ஆட்டி வைக்கும் பெரிய இடம்