Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

பெரிய மனுஷன் என நிரூபித்த மணிரத்தினம்.. வசூலில் 3வது இடத்தை பிடிக்க இதுதான் காரணம்

பெரிய மனுஷன் என நிரூபித்த மணிரத்தினம்.. வசூலில் 3வது இடத்தை பிடிக்க இதுதான் காரணம்

பொன்னியின் செல்வன் படம் நேற்று சர்வதேச அளவில் வெளியாகி நேர்மையான விமர்சனங்களை பெற்று வருகிறது. எல்லா இடங்களிலும் இப்படம் வசூலை வாரி குவித்து வந்தாலும் தமிழ்நாட்டில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. முதல் இரண்டு இடத்தை அஜித்தின் வலிமை மற்றும் […]

பொன்னியின் செல்வன் படம் நேற்று சர்வதேச அளவில் வெளியாகி நேர்மையான விமர்சனங்களை பெற்று வருகிறது. எல்லா இடங்களிலும் இப்படம் வசூலை வாரி குவித்து வந்தாலும் தமிழ்நாட்டில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. முதல் இரண்டு இடத்தை அஜித்தின் வலிமை மற்றும் விஜயின் பீஸ்ட் படங்கள் பிடித்துள்ளது.

ஆனால் வலிமை மற்றும் பீஸ்ட் படங்கள் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் தான் பெற்றது. உச்ச நடிகர்கள் என்பதால் அவர்களது ரசிகர்கள் படத்தை வணிக ரீதியாக வெற்றி அடைய செய்து. மேலும் பொன்னியின் செல்வன் படம் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட மற்றொரு காரணமும் இருக்கிறது.

அதாவது பொன்னியின் செல்வன் படம் வெளியாவதற்கு முன்பே தியேட்டர் உரிமையாளர்களுக்கு இயக்குனர் மணிரத்னம் ஒரு கோரிக்கை வைத்திருந்தார். அதாவது பொன்னியின் செல்வன் படத்திற்கான டிக்கெட் விலையை விட ஒரு பைசா கூட அதிகமாக பெறக்கூடாது என சொல்லி இருந்தார்.

மற்ற நடிகர்களின் படங்கள் எல்லாம் அதிகப்படியான டிக்கெட்டுகள் வசூலித்தனர். எவ்வளவு பணம் கொடுத்தாவது தனது நடிகரின் படத்தை பார்த்து விட வேண்டும் என ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். இதனை தியேட்டர் உரிமையாளர்கள் பகடக்காயாய் பயன்படுத்திக் கொண்டனர். இதனால் மற்ற நடிகர்களின் படங்கள் அதிக வசூல் செய்தது.

ஆனால் இந்த விஷயத்தில் மணிரத்தினம் பெரிய மனுஷனை நடந்து கொண்டிருந்தார். அதனால் தான் பொன்னியின் செல்வன் தமிழ்நாட்டில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. அதுவே மணிரத்தினம் அப்படி சொல்லாமல் இருந்தால் தமிழ்நாட்டு வசூலில் முதலிடத்தை பொன்னியின் செல்வன் பிடித்திருக்கும்.

மேலும் தற்போதும் பொன்னியின் செல்வன் படத்திற்கு நேர்மையான விமர்சனங்கள் கிடைத்து வருவதால் தொடர்ந்து ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளனர். பொன்னியின் செல்வன் படம் எதிர்பார்த்ததை விட அதிக லாபத்தை தான் பெற்றுத் தரும் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.