Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

Kamal: செல்லப்பிள்ளையை எப்போதும் விட்டுக் கொடுக்காத மணிரத்தினம்.. ராஜ்கமல் சம்பளத்தை சரி கட்டிய கமல்

Kamal: செல்லப்பிள்ளையை எப்போதும் விட்டுக் கொடுக்காத மணிரத்தினம்.. ராஜ்கமல் சம்பளத்தை சரி கட்டிய கமல்

STR48 இதற்கு இன்னும் ஒரு முடிவு தெரிந்த பாடு இல்லை. ராஜ்கமல் தயாரிப்பில் சிம்பு, தேசிங்கு பெரியசாமி இயக்குவதாக இருந்த படத்தை இப்பொழுது தள்ளி வைத்து விட்டனர். இந்த படத்திற்காக சிம்பு நீண்ட நாட்கள் முடி வளர்த்து காத்துக் […]

STR48 இதற்கு இன்னும் ஒரு முடிவு தெரிந்த பாடு இல்லை. ராஜ்கமல் தயாரிப்பில் சிம்பு, தேசிங்கு பெரியசாமி இயக்குவதாக இருந்த படத்தை இப்பொழுது தள்ளி வைத்து விட்டனர். இந்த படத்திற்காக சிம்பு நீண்ட நாட்கள் முடி வளர்த்து காத்துக் கொண்டிருந்தார்.

ஒரு கட்டத்திற்கு மேல் அந்த படத்தையே நம்பி இருந்தால் வேலைக்காகாது என்று மணிரத்தினத்தின் தக் லைப் படத்தில் நடிக்க வந்துவிட்டார் சிம்பு. அவர் நடிக்க வந்தது பிடிக்காமல் ஜெயம் ரவி அந்த படத்தில் இருந்து விலகி விட்டார். இவர்கள் இருவருக்கும் முன்பில் இருந்தே பிரச்சனை.

ராஜ்கமல் சம்பளத்தை சரி கட்டிய கமல்

ஜெயம் ரவியை தொடர்ந்து அந்த படத்தின் கால் சீட் பிரச்சனையால் துல்கர் சல்மானும் தக் லைப் படத்தில் இருந்து விலகி விட்டார். அதன்பின் ஜெயம் ரவியிடம் சமாதானம் பேசி இந்த படத்தில் நடிக்க வைப்பதற்காக எவ்வளவோ முயற்சி செய்தனர்.

ஆனால் ஜெயம் ரவி எதையும் ஏற்காமல் நடிக்க மறுத்துவிட்டார். மணிரத்தினம் சிம்புவை மட்டும் விட்டுக் கொடுக்கவே இல்லை. யார் போனாலும் பரவாயில்லை சிம்பு இந்த படத்தில் வேண்டுமென்று அடம்பிடித்தார்..சிம்புவை சிறுவயதிலேயே பார்க்கும் மணிரத்தினத்திற்கு அவர் ஒரு செல்லப்பிள்ளை போன்றவர்.

இப்பொழுது ஜெயம் ரவி கதாபாத்திரத்திற்கு வளரும் இளம் நடிகரான அசோக் செல்வனை தேர்ந்தெடுத்துள்ளார் மணிரத்தினம். இந்த படத்தின் சூட்டிங் இப்பொழுது டெல்லியில் நடந்து வருகிறது. எஸ்.டி.ஆர் 48 படத்திற்கு சிம்புக்கு கொடுத்த அட்வான்ஸ் சம்பளத்திற்கு தக் லைப் படத்தின் மூலம் சரி கட்டியுள்ளார் கமல்.

T

Thenmozhi

தேன்மொழி - கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். OTT செய்திகள் மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.