புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

மயில்சாமியின் உடலை பார்க்க கூட எனக்கு தைரியம் இல்ல.. இறப்பிற்கான காரணத்தை கூறிய மனோபாலா

நடிகர் மயில்சாமியின் இறப்பு சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் எல்லோருக்குமே தானம், தர்மம் செய்யும் மயில்சாமி இறப்பதற்கான காரணம் என்ன என்பதை நகைச்சுவை நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான மனோபாலா கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

மயில்சாமி எந்த ஒரு உயிருக்கும் தீங்கு செய்யக்கூடாது என்ற மனப்பான்மையுடன் இருக்கக்கூடியவராம். அதுமட்டுமின்றி சினிமாவில் ஒரு எதிரியைக் கூட சம்பாதிக்காத ஒரே நடிகர் என்றால் அது மயில்சாமி தான். தன்னை சுற்றியுள்ள எல்லோருமே கலகலப்பாக இருக்க வேண்டும் என்று எண்ணக்கூடியவர்.

Also Read : தான தர்மம் போக மயில்சாமி சேர்த்து வைத்த சொத்துக்களின் மொத்த மதிப்பு.. குடும்பத்தையும் நல்லா பாத்துகிட்ட மனுஷன்

இந்நிலையில் மயில்சாமியின் நெருங்கிய நண்பர் தான் மனோபாலா. இவர்கள் இருவரும் சினிமாவுக்கு வந்த புதிதில் இருந்தே நெருங்கி பழகி வருகிறார்கள். மேலும் பக்கத்து பக்கத்து வீட்டில் தான் வசித்து வந்ததால் ஒரே குடும்பம் போல தான் இருந்து வந்தனர்.

ஆனாலும் மயில்சாமியின் இறுதி சடங்கில் மனோபாலா கலந்து கொள்ளவில்லை. இது பற்றிய கேள்விக்கு மனோ பாலா கண்ணீருடன் பதிலளித்திருந்தார். அதாவது எனது நண்பனை அப்படி பார்க்க எனக்கு தைரியம் இல்லை என்று கூறியுள்ளார். மேலும் இவர்கள் இருவருமே மாமா, மச்சான் என்று தான் பேசிக் கொள்வார்களாம்.

Also Read : மயில்சாமியை பார்க்க வராத இளம் நடிகர்கள்.. அதிலும் கமல்ஹாசன் இப்படி இருப்பது மிகவும் வருத்தமானது

மயில்சாமி சாப்பாட்டு பிரியர் என்பதால் தனக்கு பிடித்த உணவுகளை எந்த நேரம் பார்க்காமல் சாப்பிடுவாராம். மனோபாலா, இப்போது வயதாகிவிட்டது இதை எல்லாம் சாப்பிடக்கூடாது என்று அறிவுரை சொன்னாலும் அவர் கேட்க மாட்டாராம். அதெல்லாம் ஒன்னும் இல்ல மச்சான் என்று அசால்டாக எடுத்துக் கொள்வாராம்.

மற்றவர் நலன் கருதும் மயில்சாமி தனது உடல் நலத்தை அக்கறையுடன் பார்த்துக் கொண்டிருந்தால் இன்னும் சில காலம் நம்முடன் பயணித்திருப்பார் என மனோபாலா வேதனையாக பேசி இருந்தார். மயில்சாமி போன்ற ஒரு நல்ல நடிகர் மட்டுமல்லாமல் நல்ல மனிதனை தமிழ் சினிமா மற்றும் இந்த சமூகம் இழந்துள்ளது.

Also Read : ஆசைப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்து உயிரை விட்ட மயில்சாமி.. கடைசியில் பார்க்க முடியாமல் போன பரிதாப நிலை.!

Trending News