திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

இதோட நிறுத்திக்கங்க! இல்லனா பிரளயமே வெடிக்கும் என எச்சரிக்கும் மன்சூர் அலிகான்

Mansoor ali khan controversy speech about trisha: குற்றமற்ற சொற்களில் தம் கருத்தை சொல்லத் தெரியாதவர் உண்மையை விளக்க பல சொற்களை பயன்படுத்த வேண்டும். என்ற வள்ளுவரின் கூற்றிற்கு இணங்க தற்போது மன்சூர் அலிகான் தான் தப்பாக பேசவில்லை, தான் சொல்ல வந்த கருத்து அது இல்லை என்று ஒவ்வொரு செய்தியாளரை கூப்பிட்டு கூவிக் கொண்டிருக்கிறார்.

லியோ பட வெற்றி விழாவில் கலந்து கொண்ட மன்சூர் அலிகான் அனைத்து நட்சத்திரங்களின் முன்னிலையிலும் தன் மனதில் பட்டதை பேசுகிறோம் என்ற மமதையில்  வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிவிட்டார். நடிகைகள் இடையே  புகைந்து கொண்டிருந்த இச்சம்பவம் தற்போது கொழுந்து விட்டு எறிய துவங்கி உள்ளது.

Also Read:லியோ படத்தைப் பற்றி பேசிய மன்சூர் அலிகான்.. வருத்தப்பட்டாலும் செய்து காட்டிய லோகேஷ்

இச்செயலை தேசிய மகளிர் ஆணையம் வன்மையாக கண்டித்ததை  கூட மன்சூர்  ஒரு பொருட்டாக கண்டுகொள்ளாமல்  தேசிய மகளிர் ஆணையத்துக்கு ரிவீட் அடித்துக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் “சரக்கு” பட ப்ரோமோஷனில் கலந்து கொண்ட  மன்சூர் அலிகான் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு ஆவேசமாக பதில் அளித்தார். தமிழ்நாடு தாண்டி பல மாநில பிரச்சினைகளையும் உள்ளிழுத்து தேசிய மகளிர் ஆணையத்தை கடுமையாக சாடியுள்ளார். லியோ படத்தில் ஆரம்பித்த இப்பிரச்சனையை விஜய் மற்றும் லோகேஷ் இருவரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

நெட்டிசன்கள் பலரும் இதனை மன்சூர் அலிகான் தன்படத்திற்கான ப்ரோமோஷன் என கலாய்க்கின்றனர்.  எது எப்படியோ? கலைத்துறையினர் உண்மை விளம்பி என்கிற பெயரில் பேசுவதை விடுத்து சப நாகரிகத்தோடு பொறுப்புணர்ந்து பேசுவது நலமே.

Also Read:மொத்தத்தையும் உளறி கொட்டிய மன்சூர் அலிகான்.. பெரும் அப்செட்டில் லோகேஷ் கனகராஜ்

Trending News