சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

லோகேஷ், விஜய்யை எரிச்சல் அடைய செய்த மன்சூர் அலிகான்.. இருக்கிறதையும் இழந்த வீரபத்ரன்

Mansoor alikhan controversy speech: மன்சூர் அலிகான் விஜய்யுடன் தான் நடித்த தேவா படத்தில் “சின்ன பொண்ணு வேண்டாம் மாமா! பெரிய பொண்ணு வேண்டாம் மாமா! அத்தை மட்டும் போதும் மாமா!” என்று மணிவண்ணனை கலங்கடித்து இருப்பார்.

சினிமாவில் தான் நடிக்க வந்த காலங்களில் முன்னணி கதாநாயகர்கள்  பலருக்கு வில்லனாக வந்து ரசிகர்களை மிரட்டி இருப்பார் மன்சூர் அலிகான். தற்போது சில படங்களில் மட்டுமே தோன்றும் மன்சூர் அலிகான், லோகேஷ் கனகராஜ் இன் விருப்பத்தின் பெயரில் லியோ வில் விஜய்யுடன் சேர்ந்து நடித்தார்.

இப்படத்தில்  திருப்புமுனையாக விஜய்யின் பிளாஷ்பேக்கை கூறும் காட்சியில் இருதயராஜ் என்ற முக்கிய கதாபாத்திரத்தில்  மன்சூர் அலிகான் நடித்திருந்தார். லியோ கடந்த அக்டோபர் மாதம் வெளியாகி வசூலை குவித்து வரும் நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் மன்சூர் அலிகான், “முன்பு உள்ளது போல் தனக்கு ஹீரோயினை துரத்தும் பலாத்கார காட்சிகள் எதுவும் இல்லை” என்று பிறர் முகம் சுளிக்க வைக்கும் படியாக பேசி உள்ளது சர்ச்சையை கிளப்பி வருகிறது.

Also Read:த்ரிஷாவை வைத்து கேவலமாக பேசிய மன்சூர் அலிகான்.. லோகேஷ் போட்ட பதிவால் ஆடி போன கோலிவுட்

இதனைத் தொடர்ந்து “இனி மன்சூர் அலிகான் உடன் சேர்ந்து நடிக்க மாட்டேன்” என்று திரிஷா அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். மேலும் லோகேஷ் கனகராஜ்,கார்த்திக் சுப்புராஜ்,மாளவிகா மோகன் மற்றும் குஷ்பூ உள்ளிட்டோரும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக மன்சூர் அலிகான் செய்தியாளர்களிடம் என் கூட நடிச்சவங்கலாம் எம்எல்ஏ,எம்பி என்று ஆயிட்டாங்க.  தான் அரசியலில்  குதிக்க இருக்கும் இவ்வேளையில் என் விரோதிகள் சிலர் நான் காமெடியாக பேசியதை கட் செய்து அவதூறு பரப்பி வருகின்றனர் என்று தெரிவித்தார். தான் சக நடிகர்களை மதிக்கிறவன் நான் காமெடியா தான் பேசினேன் அதற்காக யாரிடமும் மன்னிப்பும் கேட்க மாட்டேன் என்று அஞ்சாநெஞ்சனாக இருந்து வருகிறார்.

இவரின் இச்செயலால் கடுப்பான இந்திய தேசிய மகளிர் ஆணையம் மன்சூர் அலிகானின் பேச்சு “பெண்களுக்கு எதிரான வன்முறையாக உள்ளது” என தெரிவித்து மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க  தமிழக டிஜிபிக்கு  உத்தரவு பிறப்பித்துள்ளது.  நடிகர் சங்கமோ, மன்னிப்பு கேட்கும் வரை  மன்சூர் அலிகானை நடிகர் சங்கத்திலிருந்து தற்காலிகமாக நீக்கலாமா  என ஆலோசித்து வருகிறது.காமெடியாக பேசுகிறேன் என்று தன் வாயில் வந்ததை எல்லாம் பேசி வாயால் வாழ்ந்து கெட்டவர்களின் வரிசையில் நின்று கொண்டிருக்கிறார் மன்சூர் அலிகான்.

Also Read:மன்சூர் அலிகான் செய்த காரியத்தால் லோகேஷ் எடுத்த அதிரடி முடிவு.. லியோவில் நடிக்க வைத்து தான் பெரிய தவறு

Trending News