புதன்கிழமை, ஜனவரி 8, 2025

திரிஷாவிடம் ஒரு கோடி கேட்கும் மன்சூர்.. காலக் கடிச்ச பாம்பு உங்கள பழி வாங்காமல் போகாது அம்மணி

Trisha – Mansoor Ali Khan : கடந்த சில வாரங்களுக்கு முன்பு மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் தான் திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியது. அதாவது லியோ படத்தில் மன்சூர் அலிகான் மற்றும் திரிஷா இருவரும் சேர்ந்து பணியாற்றி இருந்தனர். இந்நிலையில் ஒரு படத்தின் விழாவில் திரிஷா குறித்து சர்ச்சையான விஷயங்களை மன்சூர் அலிகான் பேசி இருந்தார்.

இதைத்தொடர்ந்து மன்சூர் அலிகானுக்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வந்தனர். திரிஷாவும் தனது சமூக வலைதள பக்கத்தில் மன்சூர் கானை கண்டித்து பதிவு போட்டிருந்தார். இதையடுத்து மன்னித்துவிடு என்று மன்சூர் அலிகான் சொன்ன நிலையில் சிறிது நாட்களிலேயே மரணித்து விடு என்று சொன்னதாக அப்படியே திருப்பி போட்டு இருந்தார்.

இவ்வாறு பிரச்சனை பூதாகரமாக போய்க்கொண்டிருந்த நிலையில் சில நாட்களாக இது பற்றி எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது. இப்போது மீண்டும் இந்த பிரச்சனை பெரிதாக மன்சூர் அலிகான் திரிஷா மீது மான நஷ்ட வழக்கு போட்டிருக்கிறார். அதாவது தான் பேசிய வீடியோவை முழுமையாக திரிஷா கேட்காமல் தன்னுடைய பெயருக்கு களங்கம் விளைவித்துள்ளார்.

Also Read : 4 முறையாக தொடரும் அஜித்- திரிஷாவிற்கான சென்டிமென்ட்.. விடாமுயற்சியிலாவது மாற்றுவாரா மகிழ்திருமேனி?

ஆகையால் தனக்கு ஒரு கோடி ரூபாய் அவர் தர வேண்டும் என்று அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார். கால கடிச்ச பாம்பு உங்களை சும்மா விடாது என்பதைப் போல திரிஷாவை தொடர்ந்து மன்சூர் அலிகான் சீண்டி கொண்டிருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் த்ரிஷாவுக்கு ஆதரவாக பேசிய குஷ்பூ மற்றும் சிரஞ்சீவி ஆகியோரும் தனக்கு ஒரு கோடி ரூபாய் தர வேண்டும் என்று மன்சூர் அலிகான் வழக்கு கொடுத்திருக்கிறார்.

மேலும் இதுவரை திரிஷா பெரிய அளவில் எந்த பிரச்சனைக்கு நடவடிக்கை எடுக்காத நிலையில் இந்த வழக்கு மூலம் கண்டிப்பாக அதிரடியாக செயல்படுவார் என எதிர்பார்க்கலாம். மன்சூர் அலிகான் திரிஷா மீது போட்ட வழக்கு வருகின்ற திங்கட்கிழமை விசாரணைக்கு வர உள்ளது.

Also Read : அவர் பாணியில் மன்னிப்பு கேட்ட மன்சூர்.. குதர்க்கமாக குத்தி காமிச்ச திரிஷாவின் சேட்டை

Trending News