செவ்வாய்க்கிழமை, நவம்பர் 5, 2024

த்ரிஷாவை தொடர்ந்து ரஜினி ஹீரோயினையும் கொச்சைப்படுத்திய மன்சூர்.. கொந்தளிப்புடன் பேசிய வில்லன்

Mansoor who insulted Rajini heroine after Trisha: மன்சூர் என்னதான் 90’s காலகட்டத்தில் வில்லனாக இருந்தாலும் தற்போது இவருடைய பேச்சுக்கும் செயலுக்கும் ஒரு அளவே இல்லாமல் தான் ஓவராக போய்க் கொண்டிருக்கிறது. மனசுல பட்டதை வெளிப்படையாக பேசுவது ஒரு விதம், ஆனால் பேசுகிற விஷயங்கள் அனைத்தும் சர்ச்சையாக வெடிக்கிறது என்பது இன்னொரு ரகம். இதில் மன்சூர் எந்த லிஸ்டில் இருக்கிறார் என்பது தெரியவில்லை.

ஏனென்றால் இவர் தெரிஞ்சே பேசுகிறாரா அல்லது சர்ச்சையாக வெடிக்கட்டும் அதன் மூலம் மக்கள் அனைவரும் இவரை திரும்பி பார்ப்பார்கள் என்ற காரணத்திற்காக இந்த மாதிரி பேசுகிறாரா என்பதும் தெரியவில்லை. ஆக மொத்தத்தில் ஏதாவது ஒரு விதத்தில் சர்ச்சையாக பேசி வம்பில் மாட்டிக் கொள்கிறார். அப்படித்தான் லியோ-வில் நடித்து முடித்த பிறகு, திரிஷாவை பற்றி வாய்க்கு வந்தபடி பேசி பெரிய பிரச்சினையாக ஆக்கினார்.

அதே மாதிரி இவர் பேசுனது சும்மா விடமாட்டேன் என்பதற்கு ஏற்ப த்ரிஷாவும் இதற்கு பதிலடி கொடுத்து வந்தார். கடைசியாக மன்சூர் ஒரு மன்னிப்பு கேட்டதன் மூலம் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது ரஜினி ஹீரோயினையும் கொச்சைபடுத்திப் பேசி இருக்கிறார்.

Also read: கடைசி வரை விஜயகாந்தை பார்க்க விரும்பாத வடிவேலு.. பொட்டில் அடித்த மாதிரி சொன்ன மன்சூர்

கடந்த வருடம் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் தமன்னா காவலா சாங்குக்கு ரொம்ப கிளாமராக ஆட்டம் போட்டு அனைவரையும் கவர்ந்து விட்டார். இதை கொச்சைப்படுத்தும் விதமாக பெரிய நடிகர்களின் படங்களில் எவ்வளவோ அசிங்கம் எல்லாம் நடக்கிறது. அதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா. காவலா பாட்டுக்கு தமன்னா ஆடிய ஆட்டம் என்ன, அதில் கொச்சையாக வரும் வார்த்தைகள் என்ன இதெல்லாம் அருவருப்பாகவும் அசிங்கமாகவும் இருக்கிறது.

இதையெல்லாம் தணிக்கை குழுவில் கண்டிக்க முடியவில்லை தற்போது என்னை மட்டும் குறை சொல்லுகிறீர்கள் என்று பேசி இருக்கிறார். இவர் கூறியதன் காரணம் என்னவென்றால் மன்சூர் சொந்தமாக தயாரித்து நடித்துள்ள சரக்கு திரைப்படம் தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. அதில் பல காட்சிகளை நீக்க வேண்டும் என்று தணிக்கை குழு ஒரு பெரிய லிஸ்ட்டை போட்டுக் கொடுத்திருக்கிறார்கள்.

இதை பார்த்த மன்சூர் இதையெல்லாம் நீக்கிவிட்டால் படத்தில் சொல்ற மாதிரி காட்சிகள் எதுவும் இல்லாமல் போய்விடும். அப்படின்னா படம் வெளி வருவதை வேஸ்ட் என்று சொல்லி இருக்கிறார். அப்பொழுதுதான் ஜெயிலர் படத்தில் காவாலா சாங்குக்கு ஆடிய தமன்னாவையும், இடம் பெற்ற வரிகளையும் கொச்சைப்படுத்தி பேசி இதெல்லாம் தவறு இல்லையே உங்க கண்ணுக்கு தெரியாதா என்று கேட்டிருக்கிறார்.

Also read: நானும் ரவுடிதான்னு கோர்ட்டுக்கு போன மன்சூர்.. ரெக்கையை புடுங்கி அனுப்பிய நீதிபதி

- Advertisement -spot_img

Trending News