வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

பொறாமை தீயில் பொசுங்கிய சிவகார்த்திகேயன்.. ஆரம்பத்தில் எஸ் கேவை நிராகரித்த 3 நடிகைகள்

சிவகார்த்திகேயன் இன்று சினிமா துறையில் ஆலமரம் போல் வளர்ந்து நிற்கிறார். தீபாவளி சமயத்தில் வெளிவரும் பெரிய ஆர்டிஸ்ட் படங்களுக்கு நிகராக இன்று அவர் படமும் வெளிவரும் அளவிற்கு வசூல் ரீதியாகவும் வளர்ந்துவிட்டார். வி.ஜேவாக இருந்த ஒருவர் அசுர வளர்ச்சி அடைவது சினிமா துறையில் பல பேருக்கு பிடிக்கவில்லை.

ஆரம்பத்தில் எஸ் கேவை நிராகரித்த 3 நடிகைகள்

ஹன்சிகா மோத்வானி: மான்கராத்தே படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்தார். ஆரம்பத்தில் அவருடன் நடிக்க மறுப்பு தெரிவித்தார். அதன் பின் அதிக பெட்டிகள் கைமாறியதால் ஒப்புக்கொண்டார் அப்பொழுது மார்க்கெட்டில் உச்சத்தில் இருந்த ஹன்சிகா.

சமந்தா: சீம ராஜா படத்தில் நடிக்க அம்மணி செம கிராக்கி பண்ணியிருக்கிறார்கள். எப்பொழுதுமே ஹீரோ ரேஞ்சில் இல்லாத சிவகார்த்திகேயனுக்கு ஜோடி போட பல நடிகைகள் மறுத்துள்ளனர். பல போராட்டத்திற்கு பிறகு சமந்தா இந்த படத்தில் எஸ் கே உடன் ஜோடி போட்டுள்ளார்.

நயன்தாரா: மிஸ்டர் லோக்கல் மற்றும் வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்தார் நயன்தாரா. ஆனால் அவர் நடிகைகளாகிய பிரியா ஆனந்த், ஸ்ரீ திவ்யா ரேஞ்சிக்கெல்லாம் என்னால் நடிக்க முடியாது என பல கண்டிஷன்கள் போட்டார்.

ஜெயம் ரவி: ஒரு பேட்டியில் ஜெயம் ரவி என்னை பேட்டி எடுக்க வந்தவர் தான் சிவகார்த்திகேயன் இன்று அவர் என்னைவிட அதிகம் சம்பளம் வாங்குகிறார் என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இப்படி பல பேருடைய வயிற்றெரிச்சலை கொட்டிக்கொண்டு மேலே வந்தவர் தான் எஸ் கே.

Trending News