புதன்கிழமை, ஜனவரி 15, 2025

எதிர்நீச்சல் மாரிமுத்து நடிப்பில் ஜொலித்த 6 படங்கள்.. வருமன் வலதுகரமாக ஜெயிலரில் வந்த பன்னீர்

Marimuthu Acted Movies: எதிர்நீச்சல் சீரியல் மூலம் சின்னத்திரையை ஒரு கலக்கு கலக்கி வந்தவர் மாரிமுத்து. தற்போது இவர் யார் என்று கேட்டால் தெரியாதவர் யாருமே இருக்கமாட்டார்கள், அந்த அளவுக்கு அனைவருக்கும் மிகவும் பரிச்சயமானவர். இதற்கு முன்பாகவே எக்கச்சக்க திரைப்படங்கள் நடித்துள்ளார். திரைப்படங்களில் கூட இவருக்கு இந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த சீரியலுக்கு பிறகு பேமஸ் ஆகிவிட்டார், இவர் நடித்த திரைப்படத்தில் சிறந்த 6 திரைப்படங்கள் காண்போம்.

வீரமே வாகை சூடும்: தூ பா சரவணன் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளியான வீரமே வாகை சூடும் திரைப்படத்தில் இவர் “கான்ஸ்டபிள்” ஆக நடித்துள்ளார். இது ஒரு “ஆக்சன் திரில்லர்” திரைப்படம் ஆகும். படத்தில் “விஷால்” மற்றும் ரவீனா ரவிக்கு தந்தையாக நடித்திருப்பார். மகளின் சாவுக்கு பின்னால் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்க மகனுக்கு மிகவும் உதவியாக இருந்தார்.

Also Read:57 வயது எதிர்நீச்சல் புகழ் மாரிமுத்து மரணம்.. காரணம் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போன திரையுலகம்

மருது: முத்தையா இயக்கத்தில் 2016 இல் வெளியான மருது திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்தில் நடித்துள்ளார். இதில் ஸ்ரீதிவ்யாவிற்கு அப்பாவாக நடித்திருப்பார். இவருடைய மனைவி மாரியம்மா, பாண்டியன் என்னும் ஒருவரால் கொல்லப்படுவார். அதற்கு இவரும் இவருடைய மகளும் போராடும் வகையில் நேர்த்தியாக நடித்து இருப்பார்.

கொம்பன்: கார்த்தி, லக்ஷ்மி மேனன், ராஜ்கிரண் போன்ற முன்னணி நடிகர்களோடு கொம்பன் திரைப்படத்திலும் “பட்டாசு” எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முத்தையா இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான கொம்பன் கிராமப்புறம் சார்ந்த திரைப்படம் ஆகும். அங்கு இருக்கும் சூழல்களை நேர்த்தியாக இந்த திரைப்படத்தின் மூலம் பார்க்கலாம். அதில் இவருடைய நடிப்பும் குறிப்பிடத்தக்கது.

Also Read:குணசேகரன் மரணத்தை முன்பே கணித்த ஜீவானந்தம்.. எதிர்நீச்சலில் இந்த காட்சியை கவனித்தீர்களா.?

பரியேறும் பெருமாள்: பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் கயல் ஆனந்திக்கு தந்தையாக நடித்திருப்பார். தன் மகள் காதலித்தவனை துன்புறுத்தி அசிங்கப்படுத்தி, பிரித்து ஜாதி பெருமையில் வாழும் ஒரு கதாபாத்திரம் ஆகும். ஆனால் கடைசியில் செய்த தவறுகளை உணர்ந்து மகளின் காதலனிடம் மன்னிப்பு கேட்பார். எதார்த்தமான நடிப்பினால் ரசிகர்களை வியக்கும் அளவிற்கு நடித்திருப்பார்.

அன்பறிவு: அஸ்வின் ராம் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளியான அன்பறிவு திரைப்படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரிந்த குடும்பத்தை எப்படி ஒன்றாக சேர்ப்பார்கள் என்பதை மையமாகக் கொண்ட திரைப்படம் ஆகும். இதில் ஹிப் ஹாப் தமிழா அன்பு மற்றும் அறிவு என்னும் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதில் அறிவு என்பவருக்கு காதலியாக இருக்கும் காஷ்மீராக்கு தந்தையாக “சுந்தரம்” என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

Also Read:இந்தாம்மா ஏய், மாரிமுத்துக்கு நிகர் யாரு.? டிஆர்பி கிங்கின் மரணத்தால் சிக்கலில் சன் டிவி

ஜெயிலர்: சமீபத்தில் ரிலீசாகி கோடிக்கணக்கில் வசூலை அள்ளிக் குவிக்கும் ஜெயிலர் திரைப்படத்திலும் பன்னீராக நடித்துள்ளார். இவர் இத்திரைப்படத்தில் வில்லன் வருமனுக்கு வலது கையாக இருப்பார். இவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் மிகவும் பொருத்தமாக நடித்திருப்பார். வருமன் சொல்வதை இவர் அப்படியே கேட்டு நடப்பார். கொடுத்த வேலையின் படி ரஜினியுடன் சென்று கிரீடத்தை கண்காணித்து பிறகு எடுத்து வருவார். ஆனால் இறுதியில் வருமனே இவரை கொன்றுவிடுவார்.

Trending News