செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

பௌர்ணமி, அமாவாசை போல் இருந்த மாஸ் கெமிஸ்ட்ரி.. மணிரத்தினத்திடம் கோரிக்கை வைத்த ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் ரஜினி பொன்னியின் செல்வன் பட விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் ரஜினி பேசும்போது பொன்னியின் செல்வன் பற்றி சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். மேலும் மணிரத்தினத்துடன் தனது முதல் சந்திப்பை பற்றி ரஜினி பேசி இருந்தார். அதாவது மணிரத்தினத்தின் தளபதி படத்தில் ரஜினி நடித்திருந்தார்.

Also Read :மணிரத்தினத்தை வைத்து காய் நகர்த்திய சுஹாசினி.. வைரமுத்துவின் கேரியர் சோலி முடிஞ்சிருச்சு

முதல் நாள் சூட்டிங் நல்லா பளிச்சுன்னு மேக்கப் போட சொல்லி உள்ளார் ரஜினி. ஏனென்றால் ரஜினிக்கு காம்பினேஷன் ஆக நடிக்க உள்ளவர் மம்முட்டி. பார்ப்பதற்கு காஷ்மீர் ஆப்பிள் போல மம்முட்டி இருப்பதால் அவருடன் நான் சேர்ந்து நடித்தால் பௌர்ணமி, அமாவாசை காம்பினேஷனில் இருக்கும்.

இதனால் என்னுடைய ஸ்டைலில் மேக்கப் போட்டுக் கொண்டு காஸ்ட்யூம் எடுத்து வரச் சொன்னேன். பார்த்தால் ஒரு பனியன், லூசான பேண்ட் மற்றும் செப்பல் கொண்டு வந்து கொடுத்தார்கள். இதெல்லாம் என்னால் போட முடியாது என்று சொல்லிவிட்டேன்.

Also Read :ரஜினிக்கு ஏற்பட்ட அவமானம்.. காசுக்காக மட்டும்தான் நடிப்பேன் என மறுத்த இளம் நடிகை

அதன் பின்பு மணிரத்தினம் இந்த கெட்டப்-க்கு இதுதான் சரியாக வரும் எனக் கூறினார். மேலும் மம்மூட்டி பக்கத்தில் இருக்கும் போது கொஞ்சமாவது பளிச்சென்று தெரியவேண்டும். இதற்காக லைட்டாக மேக்கப் போட்டுக் கொள்ளவா என மணிரத்தினத்திடம் ரஜினி கோரிக்கை வைத்திருந்தாராம்.

தளபதி படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் இப்போதல்ல எத்தனை ஆண்டு காலம் ஆனாலும் நண்பர்கள் தினம் என்றால் முதலில் நினைவுக்கு வருவது தளபதி படமாக தான் உள்ளது. அந்த அளவுக்கு மணிரத்தினத்தின் படங்கள் காலத்தால் அழியாதது.

Also Read :முதன்முதலாக தமிழ் சினிமாவில் பிரமோஷன் செய்யப்பட்ட ரஜினி படம்.. பின் செய்த பிரம்மாண்ட சாதனை

Trending News