புதன்கிழமை, ஜனவரி 1, 2025

காற்றில் பறந்த கொள்கை.. இப்பொழுது விஜய் 66ல் அண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் மாஸ் ஹீரோ

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரிலீஸாகி திரையரங்கில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் விஜயின் 66-வது படத்தை குறித்த அப்டேட் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக பேசப்படுக்கிறது.

தளபதி66 படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபைலி இயக்க இருப்பதால், அவர் ஏற்கனவே இந்தப் படம் ஆக்ஷன் படமாக இருக்காது. முழுக்கமுழுக்க உணர்ச்சிகள் நிறம்பிய சென்டிமென்ட் படமாகத்தான் இருக்கும் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் தளபதி66 படத்தில் நம்ப முடியாத பல விஷயங்கள் நடந்து வருகிறது.

குறிப்பாக விஜய் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார். மேலும் படத்தில் விஜய்க்கு அண்ணன் கேரக்டர்கள் இரண்டு பேர் வருகிறார்கள். அவர்களாக யாரைப் போடுவது என்று படக்குழுவினர் தேடி வரும் நிலையில், ஒருவர் கிடைத்துவிட்டார். இன்னொருவரை படக்குழு தேடி வருகின்றனர்.

அந்த ஒருவர் மட்டும் எல்லா விஷயத்துக்கும் ஒத்துப் போய்விட்டால் அவர்தான் விஜய் அண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறாராம். அந்த ஒருவர் வேறுயாருமில்லை 80-களில் மக்கள் மனதை கொள்ளையடித்த ஒரு ஹீரோ.

ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருந்தவரை இப்பொழுது அண்ணனாக நடிக்க வைத்திருக்கிறார்கள். அவர் வேறு யாரும் இல்லை மைக் மோகன் தான். இவர் ஒரு காலத்தில் பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்தவர்.

ஆனால் இவருக்கு குரல் மட்டும் எஸ்என் சுரேந்தர் கொடுத்து வருகிறார். அவர் ஒப்புக்கொண்டால் மைக் மோகன் தான் அண்ணன் கதாபாத்திரம். இன்னும் ஓர் அண்ணன் கதாபாத்திரத்தை படக்குழுவினர் தேடி வருகின்றனர்.

Trending News