சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

என்னா அடி! டி-20 போட்டியில் மரண மாஸ்.. கத்துக் குட்டி அணியை கதறவிட்டு ஜிம்பாவே உலகச் சாதனை

டி 20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது ஜிம்பாவே அணி. அந்த அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ள விளையாட்டு கிரிக்கெட்.

ஜென்டில்மேன்களின் விளையாட்டு என்றழைக்கப்படும் இவ்விளையாட்டிற்கு சிறுவர் முதல் பெரியோர் முதல் பலர் ரசிகர்களும், விளையாட்டின் மீது ஆர்வலர்களாக உள்ளனர். இதில் சர்வதேச கிரிக்கெட் போட்டியைக் காணும் போது ஒவ்வொருவருக்கும் தங்கள் நாட்டு அணிதான் ஜெயிக்க வேண்டும் என்ற பெரிய உற்சாகமும் தேசத்தின் மீது பற்றும் ஏற்படும்.

இந்த நிலையில் கிரிக்கெட்டில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, வங்கதேசம், மேற்கு இந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான் என பல அணிகள் இருக்கும் நிலையில் ஒவ்வொரு அணியும் திறமை வாய்ந்தவை தான். ஆனால் உலக கோப்பை தகுதிச் சுற்றுக்கு பல்வேறு நாடுகள் போட்டியிட்டாலும் சில கத்துக்குட்டி அணிகள் அதில் இடம்பெறுவதில்லை.

டி-20 கிரிக்கெட்டில் புதிய உலகச் சாதனை

எனவே கத்துக் குட்டி என கூறினாலும் சில போட்டிகளில் முன்னணி வீரர்களைக் கொண்ட அணியையே அந்தக் கத்துக் குட்டி அணிகள் வீழ்த்தி விடும், சில நேரங்களில் சாதனையும் படைக்கும். அப்படி ஒரு புதிய உலகச் சாதனையை ஜிம்பாவே படைத்துள்ளது. அதாவது, கம்பியா எனும் ஆப்பிரிக்க நாட்டிற்கு எதிரான டி 20 போட்டியில், ஜிம்பாவே அணி ஒரே இன்னிங்ஸில் வெறும் 4 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்கள் அடித்து உலகச் சாதனை நிகழ்த்தியுள்ளது.

வரும் 2026 ஆண்டு டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடந்து வரும் நிலையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அணியில் இதில் மோதி வருகின்றன. அந்த வகையில் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள ஜிம்பாவே அணி, ஆப்பிரிக்காவின் சிறிய நாடுகளில் ஒன்றான கம்பியா அணியுடன் மோதியது.

நைரோபியில் நடந்த போட்டியில், கேப்டன் சிக்கந்தர் ராசா தலைமையிலான ஜிம்பாவே அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. சர்வதே கிரிக்கெட் விளையாடி பழக்கமில்லையோ என்னவோ, கம்பியா அணியின் பந்துவீச்சை பேட்ஸ்மேன்கள் வெளுத்து வாங்கி, சிக்ஸர்கள், பவுண்டரிகள் என வானவேடிக்கை நிகழ்த்தினர்.

2வது அதிவேக சதத்திற்கு சொந்தக்காரர்!

இதுவரை சர்வதேச போட்டிகளில் முன்னணி அணிகளுடன் பம்பி கத்துக்குடிட்டியாக காட்டி வரும் ஜிம்பாவே இம்முறை கம்பியா அணியை கத்துக்குட்டியாக நினைத்து தங்கள் திறமையை நிரூபித்தனர். ஒவ்வொரு வீரரும் தம் பங்கிற்கு மொய் வைப்பதுபோல் அணியின் வெற்றிக்கு ரன்கள் சேர்ந்தனர்.

கேப்டன் பம்ரம் போல் சுத்தி ரன் அடித்தார். அவர் வெறும் 43 பந்துகளில் 133 ரன்கள் அடித்து மரண மாஸ் காட்டினார். இதில் 15 சிக்சர்களும், 7 பவுண்டரிகளும் அடக்கம். எனவே இவர் டி 20 கிரிக்கெட் 2வது அதிவேக சதத்திற்கு சொந்தக்காரர் ஆனார்.

இன்னா அடி என்றில்லை, கத்துகுடி கம்பியா அணிக்கு மரண பீதியை காட்டிய ஜிம்பாவே அணி தாங்கள் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதுபோல் விளையாடி, 4விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் அடித்து, சர்வதேச கிரிக்கெட்டில் அதிகப்பட்ச ரன்களை பதிவு செய்து உலக சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன்பு நேபாள் கிரிக்கெட் அணி, மற்றொரு கத்துக்குட்டி அணியான மங்கோலியாவுக்கு எதிரான கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் 3 விக்கெட்ட் இழப்பிற்கு 314 ரன்கள் எடுத்தது சாதனையாக இருந்த நிலையில், இதை தற்போது ஜிம்பாவே அணி முறியடித்து திறமையை நிரூபித்து முன்னணிக்கு அணிகளுக்கு சவால் விடுவதுபோல் உலக சாதனை படைத்துள்ளது.

இப்போட்டியில் யார் ஜெயித்தது?

அதேபோல் ஒரே இன்னிங்ஸில் 27 சிக்ஸர்கள் அடித்து ஒரே இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணி என்ற சாதனையும் படைத்துள்ளது ஜிம்பாவே. இந்தப்போட்டியில் 345 ரன்கள் எடுத்தால் என்ற இலக்குடன் களமிறங்கிய கம்பியா அணி ஜிம்பாவேயின் அசுர பேட்டிங்கை பார்த்து குளிர்காய்ச்சல் வந்த மாதிரி ரொம்ப கம்பியான ரன்களில் அதாவது 54 ரன்களில் சுருண்டு தோற்றது. எனவே ஜிம்பாவே அணி 290 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. இதை அந்த நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News