அபூர்வ சகோதரர்கள், காதலா காதலா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்த நடிகர் மௌலி இயக்குனராகவும் ஏராளமான படங்களை இயக்கியிருக்கிறார். மேலும் சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் உட்பட ஒரு சில சீரியல்களிலும் இவர் நடித்திருக்கிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல திரைப்படங்களை இயக்கியிருக்கும் இவர் டைமிங் காமெடியில் கமலுக்கே டஃப் கொடுக்கக் கூடியவர். இவர் இயக்கிய படங்களில் எல்லாம் காமெடி காட்சிகள் கலக்கலாக இருக்கும். அந்த வகையில் இவர் இயக்கத்தில் வெளிவந்த ஐந்து படங்களை பற்றி இங்கு காண்போம்.
அண்ணே அண்ணே: மௌலியின் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் மௌலி, சுமித்ரா, விஜி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருப்பார்கள். காமெடி கலாட்டாவாக வெளிவந்த அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று அவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது.
ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது: மௌலியின் இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தில் பூர்ணிமா ஜெயராம், எஸ் வி சேகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். மேடை நாடகமாக வெளிவந்த இந்த கதை பின்னர் திரைப்படமாக உருவாகி நல்ல வரவேற்பை பெற்றது.
பொருத்தம்: மௌலி இயக்கி, நடித்த இந்த படத்தில் வினுசக்கரவர்த்தி, ஒய் ஜி மகேந்திரன், பூர்ணிமா, ரேகா, மனோரமா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். காமெடி சென்டிமென்ட் கலந்து வெளிவந்த இந்த படம் பேமிலி ஆடியன்ஸை மிகவும் கவர்ந்தது.
இவர்கள் வித்தியாசமானவர்கள்: ஃபேமிலி டிராமாவாக உருவாகி இருந்த இந்த படத்தில் மௌலி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அப்போதைய ரசிகர்களை கவர்ந்த இந்த திரைப்படம் இவர் இயக்கியதில் சிறந்த திரைப்படமாகும்.
பம்மல் கே சம்பந்தம்: கமல்ஹாசன், சிம்ரன், சினேகா, அப்பாஸ் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த படத்தை மௌலி இயக்கியிருக்கிறார். இதில் கமல் முழுக்க முழுக்க காமெடியில் அசத்தி இருப்பார். அதிலும் அவர் பேசும் அந்த சென்னை பாஷை அதிரி புதிரியாக இருக்கும். அந்த வகையில் மௌலி கமலுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு டைமிங் காமெடியில் அசத்தியிருப்பார்.