வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வசூல் வேட்டையாடும் சிவகார்த்திகேயன்.. மாவீரன் 2-ம் நாள் கலெக்சன் ரிப்போர்ட்

Maaveeran Collection Report: இப்போது திரும்பும் பக்கம் எல்லாம் மாவீரன் பற்றிய செய்திகள் தான் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் இப்போது ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று வருகிறது.

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருந்த இப்படம் இப்போது வரை அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் முதல் நாளிலேயே படத்திற்கு பலத்த வரவேற்பு கிடைத்த நிலையில் மூன்றாம் நாளான இன்றும் அது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Also read: தனுஷை விடாமல் துரத்தும் சிவகார்த்திகேயன்.. இருக்கிறத விட்டு பறக்க ஆசைப்படும் சம்பவம்

அந்த வகையில் 35 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் முதல் நாளிலேயே 10 கோடி வரை வசூலித்திருந்தது. விடுமுறை இல்லாத நாளிலேயே இவ்வளவு வசூலை பெற்ற மாவீரன் வார இறுதி நாளான நேற்றும் வசூல் வேட்டையாடி பாக்ஸ் ஆபிஸை மிரட்டியது.

அதன்படி இரண்டாம் நாளில் மாவீரன் 14 கோடி வரை வசூலித்திருக்கிறது. ஆக மொத்தம் இந்த இரு நாட்களிலேயே இப்படம் மொத்தமாக 24 கோடிகளை தட்டி தூக்கி இருக்கிறது. அது விடுமுறை நாளான இன்றும் தொடரும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் இரவு நேர காட்சிகள் கூட ஹவுஸ் ஃபுல்லாக தான் ஓடிக் கொண்டிருக்கிறதாம்.

Also read: ஓபன் நாளில் பட்டைய கிளப்பிய 7 படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் அள்ளிய துணிவு

இதனாலேயே பல ஆடியன்ஸ் டிக்கெட் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். அந்த அளவுக்கு மாவீரன் படம் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு அரசியல் பிரச்சினையை ஃபேண்டஸி பாணியில் காமெடி கலந்து கொடுத்திருந்த இயக்குனர் இதன் மூலம் தனக்கான வெற்றியை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

அது மட்டுமின்றி பிரின்ஸ் படத்தால் சரிவை சந்தித்த சிவகார்த்திகேயனுக்கு மாவீரன் நல்ல ஓப்பனிங்கை கொடுத்திருக்கிறது. அந்த வகையில் இவருடைய நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் அயலானுக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Also read: மாவீரனை தூக்கி நிறுத்திய விஜய் சேதுபதி.. குரல் கொடுத்ததற்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா.!

Trending News