Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

மே 9 தியேட்டரில் வெளியாகும் 7 படங்கள்.. டூரிஸ்ட் ஃபேமிலிக்கு வந்த சிக்கல்

மே 9 தியேட்டரில் வெளியாகும் 7 படங்கள்.. டூரிஸ்ட் ஃபேமிலிக்கு வந்த சிக்கல்

May 9 Theatre Release Movies: கடந்த வாரம் மே ஒன்றாம் தேதி விடுமுறை நாளை முன்னிட்டு சூர்யாவின் ரெட்ரோ மற்றும் சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி வெளியானது‌. சூர்யாவின் ரெட்ரோ நல்ல வசூலை பெற்று வருகிறது. டூரிஸ்ட் ஃபேமிலிக்கு […]

May 9 Theatre Release Movies: கடந்த வாரம் மே ஒன்றாம் தேதி விடுமுறை நாளை முன்னிட்டு சூர்யாவின் ரெட்ரோ மற்றும் சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி வெளியானது‌. சூர்யாவின் ரெட்ரோ நல்ல வசூலை பெற்று வருகிறது. டூரிஸ்ட் ஃபேமிலிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

எதார்த்தமான படத்தை எடுத்து வெற்றி கண்டுள்ளனர் டூரிஸ்ட் ஃபேமிலி படக்குழுவினர். இந்த சூழலில் இந்த வாரம் தியேட்டரில் மட்டும் கிட்டத்தட்ட ஏழு படங்கள் வெளியாகிறது. மே 9-யை குறி வைத்து வெளியாகும் படங்களை இப்போது பார்க்கலாம்.

இனிகோ, பிரபாகர், வேதிகா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கிறது கஜானா படம். இப்படத்தை பிரபதீஸ் சாம்ஸ் இயக்கி, தயாரித்திருக்கிறார். இந்த பட விழாவில் யோகி பாபுவை விமர்சித்து தயாரிப்பாளர் பேசியது நார்த்தையான.

மே 9 தியேட்டரில் வெளியாகும் படங்கள்

விஜய், கண்மணி ஆசியோர் நடிப்பில் உருவாகி இருக்கிறது நிழற்குடை. இந்த படத்தில் நடிகை தேவயானியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இளம் பெற்றோர் பற்றிய கதை தான் நிழற்குடை.

ஹிவாரி, காலித் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கிறது வாத்தியார் குப்பம். இந்த படம் வட இந்திய நிறுவனம் ஒரு கம்பெனியை தொடங்க முயற்சிக்க போது அதை கதாநாயகன் தனது கிராமத்தைக் காப்பாற்ற என்ன செய்கிறான் என்பதுதான் வாத்தியார் குப்பம்.

அடுத்ததாக லிங்கேஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் தான் என் காதல். இந்த படமும் மே 9 வெளியாகிறது. அடுத்ததாக விஜய் டிவி புகழ் ரோபோ ஷங்கர் ஹீரோவாக நடித்திருக்கும் அம்பி படமும் இந்த வாரம் திரைக்கு வர இருக்கிறது.

சவுடு மற்றும் மறைந்த மயில்சாமியின் மகன் அன்பு கதாநாயகனாக நடித்திருக்கும் எமன் கட்டளை படங்களும் மே 9 வெளியாகிறது. இவ்வாறு தியேட்டரில் இந்த வாரம் பல படங்கள் தியேட்டரில் தரையிறங்குகிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.