வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ஒரு நாள் சம்பளத்தை தாரைவார்க்கும் மாயா.. விஜய் டிவியின் அரசியலை தோலுரித்த பாய்சன்

Biggboss 7: சின்னத்திரை சேனல்கள் டிஆர்பிக்காக பல புதுப்புது விஷயங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் இப்போது விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் டிஆர்பியில் கெத்து காட்டி வருகிறது. அதில் சில அரசியல் தந்திரங்களும் இருக்கிறது.

அதன்படி பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றியதிலிருந்து சேனல் தரப்பு செய்யும் ஒவ்வொரு விஷயமும் டிஆர்பியை தக்க வைக்கத் தான். அதனாலேயே திறமையான போட்டியாளர்களும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சீசன்களும் இருக்கிறது.

அது மட்டுமின்றி விஜய் டிவியின் பிரபலங்கள் தான் பெரும்பாலானோர் இந்த ஷோவில் கலந்து கொள்வார்கள். அவர்களை இறுதிவரை எப்படியாவது விஜய் டிவி கொண்டு சென்று விடும். அப்படித்தான் இந்த சீசனிலும் ரவீனா, சரவண விக்ரம், விசித்ரா, மணி, விஷ்ணு என ஏகப்பட்ட விஜய் டிவி பிரபலங்கள் இருக்கின்றனர்.

Also read: கண்ணீர் கடலில் தத்தளிக்கும் பிக்பாஸ் வீடு.. கேம் சேஞ்சராக வரும் உறவுகளால் மாறுமா ஆட்டம்.?

இவர்களில் விசித்ரா டைட்டிலை வெல்லும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக ஒரு பேச்சும் எழுந்துள்ளது. அதை அப்படியே மாயா கணித்தது மட்டுமல்லாமல் பெட்டும் கட்டி இருக்கிறார். அதன்படி தற்போது வெளியாகி இருக்கும் ஒரு வீடியோவில் அவர் நிக்சனிடம் இது குறித்து பேசுகிறார்.

அதில் நிக்சன் 105 நாள் முடியறதுக்குள்ள இவங்க சாயம் வெளுக்க போகுது என கூறுகிறார். ஆனால் மாயா 105 ஆம் நாள் முடிவில் இவர்களில் ஒருவர் தான் வின்னராக இருப்பார். பார்க்கலாமா என்னோட ஒரு நாள் சம்பளத்தை கொடுக்கிறேன் என பெட் கட்டுகிறார்.

மேலும் எல்லாத்தையும் பூசி மெழுகி அவங்களுக்கு சாதகமாக தான் பண்ணுவாங்க என சொல்கிறார். இதன் மூலம் அவர் விஜய் டிவியின் அரசியலை நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார். அதன்படி இந்த சீசன் வின்னராவோம் என்ற நம்பிக்கை மாயாவுக்கே இல்லை என்பது தெளிவாகியுள்ளது.

Also read: அதெல்லாம் பேசக்கூடாது, நீ ஏன் அதை சொல்ற.? ஆண்டவர் தலையை உருட்டும் பூர்ணிமா

Trending News