வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விவேக், மயில்சாமி சேர்ந்து அடித்த லூட்டிகள்.. வயிறு குலுங்க சிரிக்க வைத்த 5 படங்கள்

நகைச்சுவை நடிகரும் பல குரல் கலைஞருமான மயில்சாமி சிவராத்திரி முன்னிட்டு கடந்த சனிக்கிழமை இரவு முழுவதும் கண்விழித்து, வீட்டிற்கு சென்றவுடன் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென்று உயிரிழந்தார். இவருடைய இறப்பு தற்போது திரையுலகையே உலுக்கி இருக்கிறது. இந்நிலையில் மயில்சாமியின் மரணத்திற்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது இரங்கலை சோசியல் மீடியாவில் தெரிவித்து கொண்டு இருக்கின்றனர். இந்த சூழலில் விவேக், மயில்சாமி சேர்ந்த நடித்த 5 படங்களில் அவர்கள் அடித்த லூட்டிக்கு அளவே இல்லை.

பெண்ணின் மனதை தொட்டு: 2000 ஆம் ஆண்டில் பிரபுதேவா, சரத்குமார் நடிப்பில் வெளியான இந்த படத்தில் மயில்சாமி மற்றும் விவேக் முன்னணி நகைச்சுவை நடிகராக நடித்திருப்பார்கள். அதற்கு முன்பு மயில்சாமி நடித்த படங்களில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே தோன்றிய நிலையில், இந்தப் படத்தில் தான் விவேக் உடன் ஒட்டுமொத்த காமெடிகளிலும் உறுதுணையாக நின்று ரசிகர்களிடம் பெரிதும் பிரபலமானார்.

Also Read: சிவராத்திரி அன்று சிவனிடம் சென்ற மயில்சாமி.. கடைசி நிமிடங்களில் பேசிய நிறைவேறாத ஆசை

ஏழையின் சிரிப்பில்: 2000 ஆம் ஆண்டில் பிரபுதேவா, கௌசல்யா நடிப்பில் கே சுபாஷ் இயக்கத்தில் வெளியான ஏழையின் சிரிப்பின் படத்தில் விவேக் உடன் இணைந்து மயில்சாமி தன்னுடைய நகைச்சுவை உணர்வை அட்டகாசமாக வெளிப்படுத்தி இருப்பார். இதில் விவேக் மற்றும் மயில்சாமியின் காம்போவில் வெளியான காமெடிகள் அனைத்தும் ரசிகர்களை பெரிதும் ரசிக்க வைத்தது.

தில்: 2001 ஆம் ஆண்டு தரணி இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த தில் படத்தில் கதாநாயகனாக விக்ரம் மற்றும் கதாநாயகியாக லைலா இணைந்து நடித்திருப்பார்கள். இதில் காமெடி நடிகர்களாக விவேக் மெகா சீரியல் மாதவனாகவும், மயில்சாமி விக்ரமனின் நெருங்கிய நண்பராகவும் நடித்திருப்பார். இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து காமெடி காட்சிகளிலும் விவேக் மற்றும் மயில்சாமியின் காம்போ பக்காவாக ஒர்க் அவுட் ஆகி இருக்கும். எனவே படம் முழுவதும் விவேக் மற்றும் மயில்சாமி இருவரும் இணைந்து அடித்த லூட்டிக்கு அளவே இல்லை. அந்த அளவிற்கு ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருப்பார்கள்.

Also Read: மயில்சாமி காமெடியில் கலக்கிய 6 படங்கள்.. வாட்ச்மேன் நாராயணனை மறக்க முடியுமா!

தூள்: 2003 ஆம் ஆண்டு தரணி இயக்கத்தில் விக்ரம், ஜோதிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இந்த படத்தில் விவேக் மற்றும் மயில்சாமி இருவரும் நகைச்சுவை நடிகராக நடித்திருப்பார்கள். அதிலும் நரேன் என்ற கேரக்டரில் விவேக்- கும், குமார் என்ற கேரக்டரில் மயில்சாமியும் நடித்திருப்பார். இந்த படத்தில் விவேக்கின் காமெடி சீன்களில் மயில்சாமி முக்கிய அங்கமாக இருந்து ஒவ்வொரு காட்சிகளையும் ஹிட் ஆனது.

உத்தமபுத்திரன்: தனுஷ் நடிப்பில் இயக்குனர் மித்ரன் ஆர் ஜவகர் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான காதல் நகைச்சுவை திரைப்படம் தான் உத்தமபுத்திரன். இந்த படத்தில் தனுஷ் உடன் ஜெனிலியா, விவேக், பாக்கியராஜ், மயில்சாமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இதில் மயில்சாமி சந்தோஷ் என்ற கேரக்டரில் நடித்திருப்பார். இவர் இந்த படத்தில் விவேக் மிஞ்சும் அளவுக்கு பல இடங்களில் ரசிகர்களை சிரிக்க வைத்திருப்பார். அதிலும் ‘வாரத்திற்கு இரண்டு நாட்கள் என்ஜாய் பண்ணுவேன். மற்ற மொத்த நாட்களில் கடைசி நாட்களுக்காக காத்திருப்பேன்’ என கிண்டலாக சொன்ன மயில்சாமியின் டயலாக் இன்று வரை ட்ரெண்டிங்கில் உள்ளது.

Also Read: மயில்சாமியின் கடைசி ஆசை நிறைவேற்றப்படும்.. இறுதி அஞ்சலியில் ரஜினி கொடுத்த வாக்குறுதி

இவ்வாறு இந்த 5 படங்களில் தான் விவேக் மற்றும் மயில்சாமி இருவரும் இணைந்து காமெடியில் அடி தூள் கிளப்பி இருப்பார்கள். இந்த படங்கள் அனைத்தும் இப்போது வரை ரசிகர்களின் ஃபேவரட் லிஸ்டில் இடம் பெற்று இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending News