புதன்கிழமை, ஜனவரி 15, 2025

எதிர்நீச்சல் குணசேகரனை வீடியோ வெளியிட்டு அசிங்கப்படுத்திய மீனாட்சியின் எக்ஸ் புருஷன்.. இந்த அவமானம் தேவையா?

Ethir Neechal Gunasekran: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு இருந்து வருகிறது. இந்த சூழலில் இதில் குணசேகரனாக நடித்து வரும் மாரிமுத்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இவருடைய வீடியோ தான் இணையத்தில் சமீபகாலமாக வைரலாக பரவி வருகிறது.

அந்த வகையில் கடந்த சில தினங்களாக மிகவும் பேசப்பட்ட விஷயம் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள கிழக்கு வாசல் தொடரில் குணசேகரன் நடிக்க இருந்த தகவல்தான். அதாவது விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் விஜய் டிவியின் புதிய தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Also Read : வாரம் 7 நாட்களும் சீரியலை உருட்ட போகும் சன் டிவி.. கெத்து காட்டவுள்ள டிஆர்பி ரேட்டிங்

இந்நிலையில் இவருக்கு முன்னதாக எதிர்நீச்சல் குணசேகரனிடம் தான் இந்த வாய்ப்பு சென்று இருக்கிறது. ஏதோ சில காரணங்களினால் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார். சமீபத்திய வீடியோ ஒன்றில் கூறும்போது கிழக்கு வாசல் தொடரில் முதலில் நான் தான் நடிக்க வேண்டும் என்ற விஷயத்தை வெளிப்படையாக இயக்குனர் மாரிமுத்து பேசி இருந்தார்.

இந்நிலையில் கிழக்கு வாசலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தினேஷ். இவர் சரவணன் மீனாட்சி தொடரில் மீனாட்சி ஆக நடித்து வந்த ரக்ஷிதாவின் முன்னாள் கணவர் ஆவார். சில கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

Also Read : பாக்கியாவால் வில்லனாக மாறி புலம்பி தவிக்கும் கோபி.. உசுப்பேத்தி விடும் ராதிகா

இப்போது குணசேகரனை அசிங்கப்படுத்தும் விதமாக ஒரு வீடியோவை தினேஷ் வெளியிட்டு இருக்கிறார். அதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பல பேரை இயக்குனர்கள் மனதில் வைத்திருப்பார்கள். அப்படி கிழக்கு வாசலில் மாரிமுத்து சாரை கேட்டிருப்பது சகஜம் தான். ஆனால் அதை அவர் வெளிப்படையாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

ஏனென்றால் அவர் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் மற்றொருவர் வந்து அவரை விட அற்புதமாக நடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஏன் இப்போது அவர் எதிர்நீச்சல் தொடரில் குணசேகரன் நடிக்கும் கதாபாத்திரத்தில் ஆரம்பத்தில் பல பேரை நாடி இருந்தார்கள். ஆனால் சில நடிகர்களின் கால்ஷீட் மற்றும் சம்பள பிரச்சனை காரணமாக சில தொடர்களில் நடிக்க முடியாமல் போகிறது. ஆனால் இதை இப்படி வெளியில் சொல்வது மிகவும் தவறான செயல் என்று தினேஷ் வீடியோ வெளியிட்டு இருந்தார்.

Also Read : ஆதிரையை அடைய நாக்கை தொங்க போட்டு அலையும் கரிகாலன்.. புது மாப்பிள்ளைக்கு கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்

Trending News