வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மெர்சலாக்கிய விஜய் டிவி.. பாலிவுட் ஸ்டைலில் இருக்கும் பிக்பாஸ் வீட்டின் செலவு மட்டும் இவ்வளவா?

பல நாட்களாக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆரம்பமானது. இதுவரை இல்லாத அளவுக்கு இருந்தது உலக நாயகனின் என்ட்ரி. வழக்கமான துள்ளல் நடையும், பேச்சும் என்று ஆண்டவர் வேற லெவலில் இருந்தார்.

20 போட்டியாளர்களுடன் ஆரம்பமான இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களை சுவாரசியமாக்கும் வகையில் பல டாஸ்க்குகள் கொடுக்கப்பட இருக்கின்றது. ஆரம்பமே அசத்தல் என்பது போல் பிக் பாஸ் வீட்டின் அலங்காரம் தான் தற்போது ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது.

Also read : பிக்பாஸில் என்ட்ரி கொடுக்கப் போகும் முதல் 8 பேர்.. களைகட்டிய சீசன்6

இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டத்துடன் பிக் பாஸ் வீட்டின் உள் அலங்காரம் பார்த்து பார்த்து செய்யப்பட்டிருக்கிறது. அவை ஒவ்வொன்றையும் நேற்று கமல்ஹாசன் நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே காண்பித்தார். அதைப் பார்த்த பலரும் விஜய் டிவி பாலிவுட் ரேஞ்சுக்கு காசை வாரி இறைத்துள்ளனர் என்று கூறி வந்தனர்.

அதற்கு ஏற்றார் போல் பிக்பாஸ் வீட்டின் அலங்கார செலவுகள் மட்டுமே பல லட்சம் தாண்டியதாம். அந்த வகையில் கிட்டத்தட்ட 75 லட்சத்திற்கும் மேல் செலவு செய்து இப்படி ஒரு ஆடம்பரமான வீட்டை பல டெக்னீசியன்கள் இணைந்து வடிவமைத்துள்ளனர்.

Also read : பிக் பாஸ்க்கு வந்து பெயரை கெடுத்துக்க போகும் பிரபலம்.. அடுத்த லாஸ்லியா இவங்கதான்

மேலும் ஸ்பெஷல் லைட்டிங், கேமரா, பைப் வடிவ நாற்காலி, நீச்சல் குளம் என்று ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் இந்த பிக்பாஸ் வீடு அமைந்துள்ளது. அந்த வகையில் சொர்க்கத்தையே வீடாக அமைத்துள்ளனர் என்று ரசிகர்கள் சிலாகித்து பேசி வருகின்றனர்.

இப்படி ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்திருக்கும் விஜய் டிவி தங்களுடைய டிஆர்பியை ஏற்றுவதற்கும் பல யுக்திகளை கையாண்டு வருகிறது. அதற்கு ஏற்றார் போல் முதல் நாளிலேயே பிக் பாஸ் தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார். இது எந்த மாதிரியான எதிர்வினைகளை ஏற்படுத்தும் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Also read : பிக்பாஸ் நிகழ்ச்சியே பித்தலாட்டம் தான்.. வெளியேறிய நடிகையின் ஆவேச பேச்சு

Trending News