திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

கொள்கை எல்லாம் கொள்ளபக்கம் போச்சு.. சஸ்பென்ஸ் வைக்கும் மைக் மோகனுக்கு காத்திருக்கும் இடி

என்பது காலகட்ட சினிமாவில் ரஜினி, கமலுக்கு போட்டியாக வளர்ந்து கொண்டிருந்தவர் தான் நடிகர் மோகன். இவர் நடித்த பல திரைப்படங்களும் வெள்ளிவிழா கொண்டாடியதால் இவர் வெள்ளி விழா நாயகன் என்றும் அழைக்கப்பட்டார்.

இவருடைய கால்ஷீட் கிடைக்காமல் தவித்த இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் ஏராளம் உண்டு. அந்த அளவுக்கு இவர் ரொம்ப பிசியான நடிகராக பல திரைப்படங்களில் நடித்தார். மேலும் இவர் நடிக்கும் திரைப்படங்களில் எல்லாம் எப்படியாவது ஒரு பாடலை மைக்கை பிடித்து பாடி விடுவார்.

இதனால்தான் ரசிகர்கள் இவரை மைக் மோகன் என்று கூறுகிறார்கள். பல படங்களில் ஹீரோவாக நடித்து வந்த இவர் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்தார். அதற்கு காரணம் இவர் தொடர்ந்து ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று கூறியது தான். ஆனால் கொள்கைகளை இப்பொழுது காற்றில் பறக்கவிட்ட மோகன் விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தில் அண்ணனாக நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருக்கிறார் என்று பேச்சுகள் அடிபட்டு வருகிறது.

இதனால் சில வருடங்கள் இவருக்கும், சினிமாவுக்கும் இடையே பெரிய இடைவெளி விழுந்தது. தற்போது இவர் மீண்டும் ஹீரோவாக ஹரா என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில்தான் மோகன் ரசிகர்களுக்கு ஒரு சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.

என்னவென்றால் மோகன் இதுவரை நடித்த திரைப்படங்கள் அனைத்துக்கும் எஸ்என் சுரேந்தர் தான் டப்பிங் பேசி வந்தார். பின்னணி பாடகராக இருக்கும் இவரின் குரல் மோகனுக்கு ரொம்ப பொருத்தமாக அமைந்தது. இயல்பாகவே மோகனின் குரல்வளம் அவ்வளவாக நன்றாக இருக்காது.

அதனால்தான் சுரேந்தர், மோகனுக்காக குரல் கொடுத்து வந்தார். தற்போது இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மோகன் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படத்திற்கு யார் டப்பிங் பேசி இருப்பார்கள் என்ற ஒரு சஸ்பென்ஸ் நிலவி வருகிறது.

ஒருவேளை ரிஸ்க் எடுக்கிறேன் என்று அவரே டப்பிங் பேசியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் இது நிச்சயம் அவருக்கு பெரிய அடியாக தான் இருக்கும். இந்த விஷயத்தை படக்குழு தற்போது வரை சஸ்பென்ஸாகவே வைத்துள்ளது. எது எப்படி இருந்தாலும் படம் வெளிவந்தவுடன் ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கிறது என்று தெரியத்தான் போகிறது.

Trending News