சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

நம்ம வீட்டு பிள்ளை சிவகார்த்திகேயனை அட்ட காப்பி அடித்த மிர்ச்சி செந்தில்.. துவங்கும் புத்தம் புது சீரியல் 

கால காலமாக தமிழ் சினிமாவில் வெளியாகும்  படங்களின் கதைகளை, சீரியல்களாக எடுத்து பல வருடங்கள் ஒட்டிக்கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் அண்ணன்- தங்கை பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்த சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை படத்தின் கதையை, அப்படியே ஜீ தமிழில் ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இதில் ஹீரோவாக மிர்ச்சி செந்தில் நடிக்கிறார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் பிரபலமானார். இந்த சீரியல் பட்டித் தொட்டி எங்கும் பேமஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணம் சரவணன் மீனாட்சி தொடரில் இணைந்து நடித்த செந்தில், ஸ்ரீ ஜாவின் கெமிஸ்ட்ரி தான். இந்த ஜோடியை ஊரே கொண்டாடியது.

Also Read: எலும்பும், தோலுமாய் மாறிய ரோபோ சங்கர், காரணம் இதுதான்.. உண்மையை போட்டு உடைத்த மனைவி

அதன் பிறகு இவர்கள் நிஜ வாழ்க்கையிலும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இப்போது ஒரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. சரவணன் மீனாட்சி தொடரின் வெற்றிக்கு பின்னர் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்கின்ற தொடரில் செந்தில் நடித்து வந்தார். கடந்த ஆண்டு அந்த சீரியல் நிறைவடைந்த பிறகு, இப்போது விஜய் டிவிக்கு டாட்டா காட்டிவிட்டு ஜீ தமிழுக்கு தாவி இருக்கிறார்.  

மிர்ச்சி செந்தில் ஜீ தமிழில் நடிக்க உள்ள புத்தம் புது சீரியலை பற்றிய முழு தகவலும் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது. அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த சீரியல் அப்படியே நம்ம வீட்டு பிள்ளை படத்தை அட்ட காப்பி அடித்திருக்கிறது.

Also Read: 10 பட வாய்ப்பை வேண்டாம் என உதறிய சூரி.. அஸ்வினை போல் வாயை விட்டு மாட்டிக்கிட்டியே பங்கு

இதில் சிவகார்த்திகேயன் போல் அண்ணனாக மிர்ச்சி செந்திலும், ஐஸ்வர்யா ராஜேஷ் கேரக்டரில் தங்கையாக பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவாக நடித்துக் கொண்டிருக்கும் ரித்திகா நடிக்க உள்ளார். இந்த சீரியலுக்கு ‘அண்ணா’ என டைட்டில் வைத்துள்ளனர். இதில் மிர்ச்சி செந்திலுக்கு ஜோடியாக நடிகை நித்யா ராம்  நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி அப்பாவாக ராமமூர்த்தி கேரக்டரில் நடித்துக்  கொண்டிருப்பவர், ஜீ  தமிழில் அண்ணா சீரியலில் கதாநாயகன் மிர்ச்சி செந்திலுக்கு அப்பாவாக நடிக்கிறார். விரைவில் இந்த சீரியலுக்கான ப்ரோமோவையும் ஜீ தமிழ்  வெளியிட்டு சின்னத்திரை ரசிகர்களை ஆரவாரப்படுத்தப் போகின்றனர்.

Also Read: 6 வருடங்கள் கழித்து காதலனை கரம் பிடித்த ரோஜா சீரியல் பிரியங்கா.. ட்ரெண்டாகும் போட்டோஸ்

Trending News