திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஒரே வரி கதையில் ஓகே சொன்ன சிம்பு.. இயக்குனர் மிஷ்கினிடம் ஆச்சரியப்பட்ட சம்பவம்

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ போன்ற வித்தியாசமான கதைகளை எழுதி எளிமையான முறையில் படமாக்கி மக்களை மிரளவைக்கும் இயக்குனர்தான் மிஸ்கின், இவரிடம்தான் தற்போது சிம்பு கதை கேட்டதாக கூறப்படுகிறது, அந்தக் கதை சிம்புவுக்கு மிகவும் பிடித்தும் இருக்கிறது.

இவர்கள் இருவரும் தற்போது இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் மாநாடு, வெந்து தணிந்தது காடு எனத் தொடர் வெற்றிகளை வசப்படுத்திக் கொண்டிருக்கும் சிம்புவை இயக்க உள்ள மிஸ்கின், அது எந்த மாதிரியான கதை என்ற விளக்கத்தை அளித்துள்ளார்.

Also Read: KGF யாஷ் போல மரண மாஸாக இருக்கும் சிம்பு.. பத்து தல படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

அதுவும் சிம்புவிடம் ஒரே வரி கதையை சொல்லி ஓகே வாங்கியதாகவும் கெத்து காட்டுகிறார். மிஸ்கின் இந்த படத்தின் கதையாக சிம்புவிடம் கூறும் போது, ‘கிளைமாக்ஸ் இல் 100 பேரை அடித்துக் கொள்ள வேண்டும். அதுதான் படத்தின் கதையே’ என்று சொல்லி இருக்கிறார். இதை கேட்டதும் சிம்புவுக்கு ரொம்பவே பிடித்து போய்விட்டது.

இது மாதிரியான கதைக்கு தான் இவ்வளவு நாட்களாக காத்திருக்கிறேன் என்றும் சீக்கிரம் இந்த படத்தை எடுக்க வேண்டும் என்று சிம்பு ஒத்துக்கொண்டார். ஆனால் நிஜத்தில் ஒருவர் ஒரே சமயத்தில் 100 பேரை அடிக்க முடிவது சாத்தியம் தானா? என்ற கேள்வி எழும். ஆனால் அது முடியும். ஏனென்றால் பிரதமர்களுக்கு பாதுகாவலராக இருக்கும் காவலர்கள் ஒரே சமயத்தில் 10 பேரை அடிக்கும் திறமை வாய்ந்தவர்களாக தான் இருப்பார்கள்.

அதேபோல் கையில் ஒரு துரும்பு கிடைத்தாலும் அதை ஆயுதமாக மாற்றி உயிரைக்கொடுத்து பிரதமரை காப்பாற்றும் காவலாளியாக இருப்பார்களாம். அதேபோல் சிம்பு தோற்றத்தை, பலத்தை 100 பேரை அடிப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அதை செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இந்த கதை இருக்குமாம்.

Also Read: சிம்புவுடன் கூட்டணி போடும் தனுஷ்.. டைரக்டர் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

அது போன்று தான் இந்த படத்தில் சிம்புவை காட்ட வேண்டும் என நினைக்கிறேன் என்கிறார் மிஸ்கின். மேலும் இந்த படத்திற்காக ஸ்கிரிப்ட் வேலை துவங்கப்பட்டு விட்டதாகவும் விரைவில் படத்தை குறித்த முழு விவரமும் வெளியிடப்படும் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

அத்துடன் மிஸ்கின் பெரிய ஹீரோக்களை வைத்து எப்போது படம் எடுத்தாலும் அந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும், வசூல் ரீதியாக பெரிதாக எதுவும் சாதிக்க முடியவில்லை. ஆனால் சிம்புவை வைத்து அதை மாற்றி விட வேண்டும் என மிஸ்கின் இந்த கதையை கையில் எடுத்திருக்கிறார்.

Also Read: மொத்தமாய் கழுவி ஊத்தின 5 ரீமேக் படங்கள்.. ஓவர் அலப்பறையில் அடிவாங்கிய சிம்புவின் ஒஸ்தி

Trending News