Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

Miss Shetty Mr Polishetty Movie Review- கல்யாணம் ஆகாமலே அம்மாவாக நினைக்கும் அனுஷ்கா.. மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி முழு விமர்சனம்

Miss Shetty Mr Polishetty Movie Review- கல்யாணம் ஆகாமலே அம்மாவாக நினைக்கும் அனுஷ்கா.. மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி முழு விமர்சனம்

அனுஷ்கா நடிப்பில் வெளியாகியிருக்கும் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி முழு விமர்சனம்.

Miss Shetty Mr Polishetty Movie Review: அனுஷ்காவிற்கு பாகுபலி படத்திற்குப் பிறகு பெரிய படங்கள் எதுவும் வரவில்லை. இந்த சூழலில் மகேஷ் பாபு இயக்கத்தில் அனுஷ்கா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் படம் தான் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி. வித்தியாசமான கதையாக இருந்தாலும் துணிச்சலுடன் அனுஷ்கா இந்த படத்தை தேர்ந்தெடுத்து நடித்ததற்கு பாராட்டுக்களை கூறலாம்.

தன்னுடைய அம்மாவின் கடந்த கால வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் திருமணமே வேண்டாம் என்ற முடிவில் இருக்கும் அன்விதா ஷெட்டி கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடிக்கிறார். சமையல் கலைஞராக இருக்கும் அனுஷ்கா தனது அம்மாவுடன் லண்டனில் இருக்கிறார். அதன் பிறகு அம்மாவின் இறப்பிற்கு பின் இந்தியா வருகிறார்.

ஆனால் தன்னை சுற்றி யாருமே இல்லாததால் தனிமையை உணரும் அனுஷ்கா திருமணம் ஆகாமல் உயிரணு மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார். இதற்காக சரியான ஒரு ஆளை தேர்ந்தெடுக்க அனுஷ்கா பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தான் ஸ்டாண்ட் அப் கலைஞனாக பொலிஷெட்டி அதாவது நவீன் தென்படுகிறார்.

அவருடன் அனுஷ்கா நெருங்கி பழகுவதை காதல் என்று தவறாக நவீன் புரிந்து கொள்கிறார். அதன் பிறகு தான் தன்னுடைய உயிரணு மூலம் அவருக்கு குழந்தை வேண்டும் என்பதை தெரிந்த பின் பிரச்சனை ஏற்படுகிறது. அதன் பிறகு இவர்களுக்குள் என்ன நடக்கிறது என்பதுதான் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி.

அதாவது தனிமையில் ஒருவர் எவ்வாறு வேதனையை அனுபவிக்கிறார் என்பதை அனுஷ்கா எதார்த்தமாக காட்டி இருக்கிறார். மேலும் ஆண்கள் மீது உள்ள வெறுப்பின் காரணமாக கல்யாணம் ஆகாமலேயே குழந்தை பெற்றுக் கொள்ளும் முடிவுக்கு அனுஷ்கா வந்திருப்பது அவர் பக்கத்தில் இருந்து நியாயமாக தான் தெரிகிறது.

இந்தப் படத்தில் நூல் இலையில் சொதப்பினால் மொத்தமாக மாறிவிடும். அதை பக்குவத்துடன் இயக்குனர் கையாண்டிருப்பதற்கு பாராட்டுக்கள். அனுஷ்கா மற்றும் நவீன் இந்த படத்திற்கு சரியான தேர்வாக அமைந்திருக்கிறது. குடும்பத்துடன் இந்த படத்தை இப்போது ரசிகர்கள் திரையரங்குகளில் கண்டு களித்து வருகிறார்கள்.

சினிமாபேட்டை ரேட்டிங் : 2.75/5

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.