இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை வென்றுள்ளது. அடுத்து நடந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஒன்று இலங்கையையும், மற்றொன்று ட்ராவிலும் முடிவடைந்துள்ளது.
இந்த தொடரில் தற்சமயம் இலங்கை அணி முன்னிலையில் இருக்கிறது. மூன்றாவது போட்டியில் இந்திய அணி தோற்று விட்டால் இலங்கை தொடரை வெல்லும். மாறாக இந்தியா ஜெயித்தால் இந்த தொடர் சமமாக முடியும். ஏற்கனவே 20 ஓவர் தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது.
இதுவரை இந்திய அணி இலங்கையுடன் மோதிய 11 தொடர்களில் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவை,இலங்கை அணி வீழ்த்தி கிட்டத்தட்ட 27 ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்பொழுது இலங்கை அணி புது பயிற்சியாளராக சனத் ஜெயசூர்யா நியமிக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி புது கேப்டனாக இளம் வீரர் அசலங்கா செயல்பட்டு வருகிறார்.
இந்திய அணிக்கு ஜெயசூர்யா வைக்கும் கண்டம்
இன்று நடைபெற்று வரும் மூன்றாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றால் 27 வருடங்கள் கழித்து இந்திய அணியுடனான தொடரை கைப்பற்றும். இதற்கு முன்னர் அவர்கள்1997 ஆம் ஆண்டு இந்திய அணியை தோற்கடித்துள்ளனர்.
இந்த தொடரில் இலங்கை அணி ஜெயசூர்யா பயிற்சியின் கீழ் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அவர்கள் தங்களது சுழற்பந்துவீச்சு மூலம் இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். மேலும் இந்த தொடரில் அவர்கள் கையே ஓங்கி இருக்கிறது. இலங்கை அணியின் 27 வருட காத்திருப்புக்கு இன்று பதில் கிடைத்துவிடும்.