வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

மத்தளம் போல ரெண்டு பக்கமும் அடி வாங்கும் சிவகார்த்திகேயன்.. ஆயிரம் காக்கைக்கு ஒரு கல் போதும்

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சோதனை மேல் சோதனை வந்து கொண்டுதான் இருக்கும் போல. அமரன் படம் எப்ப ஆரம்பிச்சாங்களோ அப்ப ஆரம்பிச்சது அவருக்கு ஏழரை நாட்டு சனி. மத்தளத்துக்கு எப்படி இரண்டு பக்கமும் அடி விழுமோ அதே மாதிரி இவருக்கும் ரெண்டு பக்கமும் அடி அடின்னு வச்சு செய்றாங்க.

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்துல நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துக் கொண்டிருக்கும் படம் அமரன். படத்தோட டீசர் சில நாட்களுக்கு முன்பு தான் வெளிவந்தது. கெட்ட கெட்ட வார்த்தையா இருந்தாலும் மிலிட்டரி மேன் பவர் என்னன்னு இந்த டீசரில் பார்க்க முடிந்தது.

டீசர் எல்லாம் நல்லாதான் இருந்துச்சு ஆனா படம்தான் இன்னும் முடிக்கல. எல்லாம் நல்லா போயிட்டு இருக்கும்போது இன்னும் கொஞ்சம் சீன் இருக்கு என ராஜ்குமார் பெரியசாமி இழுத்துக் கொண்டே செல்கிறார்.

அதுக்கு காரணம் இன்னும் சிவகார்த்திகேயனுடைய கால்ஷீட் 25 நாள் பாக்கி இருக்கு. அதனால அந்த கால்ஷீட் வேஸ்ட் பண்ணாம ஏதாவது சில முக்கியமான காட்சி எடுக்கலாம்னு ராஜ்குமார் பெரியசாமி நினைக்கிறாரு.

சிவகார்த்திகேயன் நெருக்கும் முருகதாஸ்

அங்கதான் ஒரு ட்விஸ்ட் இருக்கு. ராஜ்குமார் பெரியசாமி படத்தை இழுத்துகிட்டே போக சிவகார்த்திகேயன் முருகதாஸ் படத்துக்கு அப்படியே போயிட்டாரு. அதே நேரத்துல முருகதாஸுக்கு சல்மான்கான் வேற அவருக்கு போன் போட்டு ரொம்ப பிரஷர் போட்டுட்டே இருக்காராம்.

முருகதாஸ் சிவகார்த்திகேயனை வச்சு எடுக்க வேண்டிய சீன் எல்லாம் எடுத்து முடிக்கணும். அதோட இந்த படத்தை ஒரேடியா முடிச்சு குடுத்துடனும் அப்படின்னு தீயா வேலை செஞ்சுட்டு இருக்காரு.

அதனால சிவகார்த்திகேயன் கூவத்தூர் பங்களாவில் போட்டு அடச்சி வச்ச மாதிரி இவரையும் ஒரு பங்காளல போட்டு அடச்சி வெச்சிக்கிட்டு வேலை வாங்கிட்டு இருக்கறாராம் முருகதாஸ். எங்கேயும் போகக்கூடாது அப்படின்னு பெரிய கண்டிஷன் வேற போட்டு இருக்கிறார்.

இதை கேள்விப்பட்ட அமரன் பட தயாரிப்பாளர் கமலஹாசன் சிவகார்த்திகேயன் மேல செம காண்டாக இருக்கிறாராம். யாரு காண்டானா என்ன? ஒழுங்கா திட்டமிட்டால் மட்டும் படத்த கண்டிப்பா முடிக்கலாம். இதெல்லாம் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் மாதிரி ஒரு ஆள்கிட்ட கத்துக்கங்கபா.

Trending News