ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

கொஞ்ச நேரம் வந்தாலும் ரணகளப்படுத்திய 6 கேரக்டர்கள்.. இன்னும் மவுசு குறையாத வட சென்னை ராஜன்

Most Popular Movie Characters: ஒரு சில படங்களில், சில கதாபாத்திரங்கள் ஒரே ஒரு காட்சியில் வந்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் அப்படியே நிலைத்து நின்று விடும். அந்த கேரக்டரை வைத்து தனியாக ஒரு படம் பண்ணலாம் என்ற அளவிற்கு ரசிகர்கள் அதில் நடித்தவர்களை கொண்டாடுவார்கள். அப்படி ஒரு சில காட்சிகளிலேயே வந்து மக்களின் மனதை இந்த ஆறு கேரக்டர்கள் ஜெயித்திருக்கிறது.

வேட்டையன்: சந்திரமுகி படத்தில் கோவிலில் ஒரு பூசாரி வேட்டையன் ராஜா மற்றும் சந்திரமுகியின் கதையை சொல்லி இருப்பார். அதன் பின்னர் படத்தின் கிளைமாக்ஸ்ஸில் வரும் ரா ரா பாடலுக்கு மட்டும் ஒரு சில நிமிடங்கள் ரஜினி வேட்டையன் போல் நடித்திருப்பார். சில நொடிகளிலே இந்த வேட்டையன் ராஜாவின் காட்சிகள் இருந்தாலும் இன்று வரை ரசிகர்களிடம் பிரபலமாக இருக்கிறது.

Also Read:மாமன்னன் கதையை கவுண்டமணி 2 நிமிஷ காமெடியிலேயே சொல்லிட்டாரு.. அப்போவே டஃ ப் கொடுத்த நக்கல் மன்னன்

ராயப்பன்: தளபதி விஜய் நடிக்கும் எல்லா கேரக்டர்களுமே அவருடைய ரசிகர்களுக்கு பிடிக்கும் என்றாலும், பிகில் படத்தில் ஃபிளாஷ்பாக் சீனில் வரும் ராயப்பன் கேரக்டர் அதிக வரவேற்பு பெற்றது. இன்று வரை விஜய் ரசிகர்கள் இயக்குனர் அட்லியிடம் ராயப்பன் கேரக்டரை மட்டும் வைத்து ஒரு படம் பண்ணுங்கள் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

பல்ராம் நாயுடு: உலக நாயகன் கமலஹாசன், தசாவதாரம் திரைப்படத்தில் பத்து கேரக்டர்களில் நடித்திருப்பார். இந்த கேரக்டர்கள் எல்லாமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் காவல்துறையை சேர்ந்த பல்ராம் நாயுடுவாக தெலுங்கு கலந்த தமிழில் பேசும் கேரக்டர் எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருந்தது.

ரோலக்ஸ்: நடிகர் சூர்யா இதுவரை எந்த திரைப்படத்திலும் முயற்சி பண்ணாத கேரக்டர் என்றால் நெகடிவ் ஷேடு உள்ள கதாபாத்திரம் தான். உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் அதையும் முயற்சி செய்திருந்தார். படத்தின் முடிவில் இரண்டே நிமிட காட்சியில் ரோலக்ஸ் வந்திருந்தாலும், இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படும் கேரக்டராக இருக்கிறது.

Also Read:வாயில் விஷத்தோடு வடிவுக்கரசி நடித்த 5 படங்கள்.. தேள் போல் சிவாஜியையும், ரஜினியையும் கொட்டிய வேதவள்ளி

ராஜன்: நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான வெற்றி படங்களில் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் வடசென்னை. இதில் இயக்குனர் அமீர், ராஜன் என்னும் கேரக்டரில் நடித்திருப்பார். இந்த கேரக்டர் இன்றுவரை பிரபலமாக இருப்பதோடு, சமூக வலைத்தளங்களில் வைரலாகும் மீம்ஸ்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

டான்சிங் ரோஸ்: இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் சர்பட்டா பரம்பரை. இந்த படத்தின் ஹீரோவான ஆர்யாவுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருந்ததோ அதைவிட கொஞ்சம் அதிகமாகவே டான்சிங் ரோஸ் கேரக்டரை ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

Also Read:பாசத்தால் உருக வைத்த டி ராஜேந்தர் 5 படங்கள்.. அண்ணன் தங்கை பாசத்தை காட்டிய ‘என் தங்கை கல்யாணி’

 

Trending News