சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

டிஆர்பி-யில் அசுர பலத்தை காட்ட போட்டிபோடும் 5 சீரியல்கள்.. விஜய் டிவி-யை துரத்தி அடித்த சன் டிவி

சின்னத்திரை ரசிகர்களை கவர்வதற்காகவே புது புது கதைகள் கொண்ட சீரியல்களையும், விதவிதமான என்டர்டைன்மென்ட் நிகழ்ச்சிகளையும் கொடுத்து விஜய் மற்றும் சன் டிவி சேனல்களுக்கு இடையே டிஆர்பி-யில் கடும் போட்டி நிலவும்.

அதிலும் தற்போது மிகவும் பிரபலமான டாப் 5 ஃபிக்சன் (fiction) மற்றும் நான்ஃபிக்சன் (non-fiction) பிரபலங்களின் லிஸ்ட் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகிறது. இதில் ஃபிக்சன் டாப்-5 பிரபலங்களில் இடத்தை எப்பொழுதும் டிஆர்பி-யில் டாப் இடத்தை பிடிக்கும் கயல் சீரியலின் கதாநாயகி பெற்றிருக்கிறார். கயல் ஆக நடிக்கும் சைத்ரா ரெட்டி, ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடித்து கலக்கியவர்.

மேலும் இவர் வெள்ளித்திரையில் வலிமை போன்ற ஒரு சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவரை தொடர்ந்து 2-வது இடம் சுந்தரி சீரியலின் கதாநாயகி சுந்தரி பெற்றிருக்கிறார். சுந்தரியாக நடிக்கும் கேப்ரியெல்லா பல மேடை நிகழ்ச்சிகளிலும் வெள்ளித்திரையில் ஒரு சில படங்களிலும் நடித்திருக்கிறார்.

3-வது இடம் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் கதாநாயகி பெற்றிருக்கிறார். பாக்யாவாக நடிக்கும் சுசித்ரா, குடும்பத்தலைவிகள் படும் பாட்டையும் கணவனை நம்பி ஏமாறும் சில பெண்களிடம் இருக்க வேண்டிய துணிவையும் இந்த சீரியலின் மூலம் சிறப்பாக நடித்து வெளி காட்டுகிறார்.

4-வது இடம் ரோஜா சீரியல் ரோஜாவிற்கும், 5-வது இடம் பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவிற்கும் கிடைத்திருக்கிறது. இதைப்போன்று நான்ஃபிக்சன் (non-fiction) பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் இருக்கும் பிரபலங்களின் டாப்-5 லிஸ்டில் முதலிடத்தை சிவங்கி பெற்றிருக்கிறார்.

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் போட்டியாளராக பங்கேற்ற சிவாங்கி, அதன்பிறகு தனது குழந்தைத்தனமான பேச்சாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை தன் வசப்படுத்தினார். அதன்பிறகு சிவகார்த்திகேயனுடன் டான் படத்தில் நடித்து வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்து, தற்போது தொடர்ந்து பல பட வாய்ப்புகளை பெற்று வருகிறார்.

2-வது இடம் கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி பிரபலம் புகழுக்கு கிடைத்திருக்கிறது. இவரும் அஜித்துடன் வலிமை படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 3-வது இடம் கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான பாலாவிற்கு கிடைத்திருக்கிறது.

4-வது இடம் பல வருடங்களாக விஜய் டிவியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கோபிநாத் பெற்றுள்ளார் 5-வது இடம் விஜய் டிவியின் தொகுப்பாளர் பிரியங்கா பிடித்திருக்கிறார். இவ்வாறு இந்த டாப்-5 சின்னத்திரை பிரபலங்களின் லிஸ்ட் தற்போது இணையத்தில் அவர்களுடைய ரசிகர்களால் ட்ரெண்டாக்கப்படுகிறது.

Trending News