செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

திருமதி செல்வம், தென்றல் சீரியல் சேர்ந்து வரும் லட்சுமி.. களைகட்ட போகும் சன் டிவியின் டிஆர்பி ரேட்

Sun Tv New Serial Upcoming: காலம் காலமாக தாத்தா பாட்டி காலத்தில் இருந்து இப்பொழுது வரை சீரியலுக்கு எப்பொழுதுமே மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிலும் சன் டிவி சீரியலுக்கு இணையாக எந்த சேனலுமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஒய்யாரத்தில் ஜொலித்து வருகிறது. அதனால் தான் காலையில் எட்டு சீரியல், மாலையில் எட்டு சீரியல் என்று வருகிறது.

இப்படி இருப்பதனால் என்னமோ சன் டிவி டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஐந்து இடத்தை பிடித்திருக்கிறது. இன்னும் இதை வலுப்படுத்தி 90ஸ் கிட்ஸ்களை கவரும் விதமாக அந்த ஆர்டிஸ்ட்களை வைத்து மலரும் நினைவுகளை ஞாபகப்படுத்த போகிறார்கள். அதாவது சன் டிவியில் புத்தம் புது சீரியல் ஒளிபரப்பாக போகிறது.

அதை பார்க்கும் பொழுது திருமதி செல்வம் மற்றும் தென்றல் சீரியல்களை சேர்த்து வைத்து பார்த்தால் எப்படி இருக்குமோ அந்த ஒரு உணர்வை தூண்டுகிறது. அதாவது திருமதி செல்வம் சீரியலில் மூலம் அனைவரையும் கவர்ந்த சஞ்சீவ் மற்றும் தென்றல் சீரியலில் துளசி கேரக்டரில் நடித்த சுருதி இருவரும் ஜோடி சேர்ந்து லட்சுமி சீரியலில் இணைந்திருக்கிறார்கள்.

Also read: தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொண்ட ரோகிணி.. ஓவரா குதிக்கும் விஜயா,பிளாக்மெயில் பண்ணும் முத்து

அதாவது நடுத்தர குடும்பத்தில் இருக்கும் சுருதிக்கு இரண்டு தங்கைகள் இருக்கிறார்கள். அந்த தங்கைகளின் விருப்பப்படி அவர்களை பெரிய ஆளாக ஆக்க வேண்டும். அத்துடன் நான் வேலை பார்க்கும் மொத்த சம்பளத்தையும் என் குடும்பத்திற்கு தான் கொடுப்பேன். இதற்கு எந்த மாப்பிள்ளை சம்மதம் சொல்கிறாரோ, உடனே நான் திருமணத்திற்கு தயார் என்று சொல்லும் மனநிலைமையில் சுருதி கேரக்டர் இருக்கப் போகிறது.

அதே நேரத்தில் சஞ்சயின் அம்மா கேரக்டர், என் வீட்டுக்கு வர போற மருமகள் கழுத்து நிறைய நகையும் கையில் பணத்துடன் வரவேண்டும். அதுமட்டுமல்ல மாதம் 1ம் தேதி ஆனா அவளுடைய மொத்த சம்பளப் பணத்தையும் என் கையில் கொடுக்க வேண்டும். அப்படி ஏதாவது ஒரு பொண்ணு இருந்தால் சொல்லு என் பையனுக்கு கல்யாணத்தை பண்ணி வைக்கிறேன் என்று முரண்பாடான கருத்துடன் இருக்கிறார்.

இந்த சூழலில் கடவுள் போட்ட முடிச்சு சஞ்சீவ் மற்றும் சுருதி இருவரும் வாழ்க்கையில் ஒன்று சேர்வது மாதிரி அமைகிறது. அதன்படி இவர்களுடைய கருத்துக்கள் மற்றும் எண்ணங்கள் எந்த அளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்த போகிறது என்பதை வைத்து இந்த நாடகம் சன் டிவியில் வரப்போகிறது. அந்த வகையில் பல வருடங்களாக அண்ணன் தங்கையின் பாசத்தை உருட்டி வந்த வானத்தைப்போல சீரியல் முடிவடைய போகிறது. அதற்கு பதிலாக லட்சுமி சீரியல் ஒளிபரப்பாகும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் கூடிய விரைவில் வெளிவரும்.

Also read: சின்ன பிள்ளைத்தனமாக விளையாடும் கோபி, அசிங்கப்படுவதே வேலையா போச்சு.. கெத்து காட்டும் பாக்கியா

Trending News