21 வயதான நிதீஷ் குமார் ரெட்டி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். கடந்த மூன்று போட்டிகளிலும் 7ஆவது பேட்ஸ்மேனாக விளையாடிய இவர், தன் பங்கிற்கு ஒவ்வொரு போட்டிகளிலும் 40 ரண்களுக்கு மேல் அடித்து தன் திறமையை நிரூபித்து வந்தார்.
இவர் ஒரு மத வேக பந்துவீச்சாளரும் கூட. இந்திய அணிக்காக 20 ஓவர் போட்டியில் பங்களாதேஷ்க்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் நிரந்தர இடம் பிடித்தார். ஹர்திக் பாண்டியா, சிவம் டுபே போன்ற வீரர்கள் வரிசையில் அடுத்த ஆல்ரவுண்டர் என பெயர் எடுத்து வந்தார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் “பாக்சிங் டே” டெஸ்ட் போட்டியில் இவர் இன்று தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்தார். நிதிஷ் ரெட்டி ஏழாவதாக களம் இறங்கி வாஷிங்டன் சுந்தர் உடன் 137 ரன்கள் அடித்து வலுவான பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை இந்த டெஸ்ட் போட்டியில் இருந்து காப்பாற்றியுள்ளார்.
இந்த போட்டியில் 175 பந்துகளில் 106 ரன்கள் உடன் களத்தில் நிற்கிறார். இந்திய அணி தன்னுடைய முதல் இன்னிங்ஸ்சில் 358/9 விக்கெட்டுகளை இழந்துள்ளது. நிதிஷ் ரெட்டியும், முகமது சிராஜும் களத்தில் நிற்கின்றனர். இந்நிலையில் முன்னாள் இந்திய அணியின் தேர்வு குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் நிதிஸ் ரெட்டியை ஒரு குழப்பவாதி என கூறி உள்ளார்.
நிதீஷ் குமார் ஒரு முழுமையான பந்துவீச்சாளர் என்று பார்த்தால் அதுவும் இல்லை. அவர் ஒரு முழு பேட்ஸ்மேன் என்று பார்த்தால் அதுவும் இல்லை. ஒரு போட்டியை வென்று தரும் அளவிற்கு அவரிடம் திறமை இல்லை எனவாய்க்கு வந்தபடி பேசியுள்ளார் ஆனால் இருவரும் ஆந்திராவை பூர்விகமாக கொண்டவர்கள்.