வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

சிவகார்த்திகேயனுடன் சேரப்போகும் மிஸ்கின்.. சம்மந்தமே இல்லாமல் யோசிக்கும் இயக்குனர்

டாக்டர், டான் போன்ற இரண்டு படங்களில் 100 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவித்த சிவகார்த்திகேயன் பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். பிரின்ஸ் படம் தீபாவளி அன்று வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். பிரின்ஸ் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி உள்ளது.

இதன் மூலம் சிவகார்த்திகேயன் தெலுங்கு சினிமாவில் கால்பதிக்க உள்ளார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று நேற்று நாளை பட இயக்குனர் ஆர் ராஜ் குமார் இயக்கத்தில் அயலான் திரைப்படம் உருவாகி உள்ளது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்.

தற்போது சிவகார்த்திகேயன் கமல்ஹாசனின் தயாரிப்பில் மாவீரன் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளார். சிவகார்த்திகேயனின் 21-வது படமான மாவீரன் படத்தில் இவர் ராணுவ வீரராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் அடுத்து மண்டேலா படத்தை இயக்கிய இயக்குனர் உடன் இணைய உள்ளார். இப்புதிய படத்தில் பாலிவுட் கதாநாயகியான கியாரா அத்வானி நடிப்பதாக கூறி வருகின்றனர். தற்போது இப்படத்தில் மிஷ்கின் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் சிவகார்த்திகேயனின் மிஷ்கினும் சேருவதை பார்த்த ரசிகர்கள் மிஸ்கின் இயக்கத்தில் தான் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என கூறி வந்தனர். ஆனால் சிவகார்த்திகேயன் படத்தில் மிஸ்கின் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் மிஸ்கின் கதாபாத்திரம் ஒரு முக்கியமானது எனவும் படத்தின் கதையே அதை வைத்துதான் நகர்வதால் அது என்ன கதாபாத்திரம் என சஸ்பென்சாக படக்குழுவினர் வைத்துள்ளனர்.

பிசாசு, சைக்கோ, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், துப்பறிவாளன் போன்ற சைக்கோ படங்களை எடுத்த கில்லாடி ஆன மிஸ்கின், டைமிங் டைமிங் காமெடிகளின் மூலம் ரசிகர்களை கவர்ந்த சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்க இருப்பதால் இதில் காமெடிக்கும் சைக்கோவுக்கும் பஞ்சம் இல்லாத படமாக உருவாகப் போகிறது.

Trending News