செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

மேடையில் கெட்ட வார்த்தை பேசிய மிஷ்கின்.. தத்துவம் சொல்றேன்னு பெயரைக் கெடுத்துக் கொண்டு செய்யும் அக்கப்போரு

Director Mysskin: இயக்குனர் மிஷ்கின் இப்போது நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார். அதுவும் தளபதி விஜய்க்கு வில்லனாக லியோ படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படத்தில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. ஆனால் மிஷ்கின் எல்லாவற்றையுமே வித்தியாசமான கோணத்தில் பார்க்கக் கூடியவர்.

இது சிலருக்கு சரி என்று பார்த்தாலும் பெரும்பாலானோர் தவறாகத்தான் நினைக்கக்கூடும். அதாவது சினிமாவில் பட விழாக்களில் மிஷ்கினை அழைப்பதை பலர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். காரணம் அவருடைய சர்ச்சையான பேச்சு படத்திற்கு ப்ரமோஷனாக அமைந்துவிடுகிறது.

Also Read : அவரு சாப்பிட்டு உதறும் எச்ச பருக்கை தான் நான்.. இசையமைப்பாளராக புல்லரிக்க வைத்த மிஷ்கின்

இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மிஷ்கின் காமெடி என்ற பெயரில் நாளுக்கு நாள் அக்கப்போரு செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் பேசியது தான் இப்போது சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது. அதாவது தேன் விற்பவர் மிஷ்கினிடம் ஐந்து லிட்டர் கேனை கொடுத்தாராம். ஏற்கனவே வீட்டில் பத்து முதல் 15 லிட்டர் தேன் இருக்கிறது.

மேலும் கொடுப்பது தேன் என்பதால் வேண்டாம் என்றும் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் அவர் சிகரெட்டு, மதுவோ கொடுத்திருந்தால் அது தவறு என்று வாங்காமல் இருக்கலாம். ஆனால் ஆதி காலத்தில் இருந்து பயன்படுத்தி வரும் தேனை கொடுப்பதினால் வேண்டாம் என்று சொல்ல முடியவில்லை.

Also Read : படப்பிடிப்பில் அதிக பிரசிங்கித்தனமாக செய்த மிஷ்கின்.. ஹீரோக்களை காக்கா பிடித்த மட்டமான வேலை

மேலும் என்னுடைய அப்பா மற்றும் அம்மா யாரையும் எளிதில் நம்பி விடக்கூடாது என்று சொல்லி இருக்கிறார்கள் என்று சொன்ன மிஷ்கின் பெற்றோரையே கெட்ட வார்த்தைகள் பேசி இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் இது சுத்தமான தேனா என்று சந்தேகம் வந்தது என மிஷ்கின் கூறியிருக்கிறார்.

தத்துவம் என்ற பெயரில் அவர் சொல்லிய கதையும் புரியவில்லை, போதாக்குறைக்கு மோசமான கெட்ட வார்த்தை பேசி கொஞ்ச நஞ்சம் இருந்த பெயரையும் மொத்தமாக கடுத்துக் கொண்டார். மேலும் இதே போல் தொடர்ந்து மிஷ்கின் அநாகரிகமாக பேசி வந்தால் ஒட்டுமொத்தமாக மிஷ்கின் படங்களையே ரசிகர்கள் புறக்கணிப்போம் என்று கூறி வருகிறார்கள்.

Also Read : லியோ படத்தின் ஒன் லயன் ஸ்டோரி இதுதான்.. கதை கசிந்ததால் கவலையில் லோகேஷ்

Trending News