வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

குணசேகரன் அப்பத்தாவிற்கு எதிராக வந்த ஜனனியின் அப்பத்தா.. குடும்பத்துடன் ஒட்டிக் கொள்ளும் போகும் நாச்சியப்பன்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், பல மாதங்கள் கழித்து நேற்றைய எபிசோடு தான் அல்டிமேட் என்று சொல்லும் அளவிற்கு கதை ரொம்பவே சுவாரஸ்யமாக இருந்தது. இதைதான் இத்தனை நாளாக எதிர்நீச்சல் சீரியலில் மிஸ் பண்ணினோம் என்று சொல்லும் விதமாக ஜனனி மற்றும் சக்தியின் நடிப்பு ரொம்பவே தூக்கலாக இருந்தது.

அத்துடன் மெய்யப்பன் குடும்பம் ஜனனிக்கு என்ன உறவு முறை வேண்டும், நாச்சியப்பன் குடும்பம் யார் என்கிற உண்மையையும் ஜவ்வு மாதிரி இழுத்தடிக்காமல் நேற்று போட்டு உடைத்தது ரொம்பவே நன்றாக இருந்தது. இனிமேல் ஜனனிக்கு இந்த குடும்பம் நம்முடைய குடும்பம், எப்படியாவது ஒன்று சேர வேண்டும் என்று கண்டிப்பாக முயற்சி எடுப்பார்.

ஆனால் இதுவரை குணசேகரன் அப்பத்தாவிற்கு இருந்த மவுஸ் ரொம்பவே அதிகம். ஏனென்றால் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் சுயமாக சிந்தித்து செயல்பட வேண்டும் என்று அவர் சொல்லிய விஷயங்கள் அனைத்தும் மனதிற்கு ஒரு தெம்பாக இருந்தது. அப்படிப்பட்டவர் தற்போது இல்லை என்றாலும் அவருக்கு பதிலாக ஜனனி அப்பத்தா வந்திருக்கிறார்.

Also read: ரெண்டு புருஷனிடம் மாட்டி தவிக்கும் அமிர்தா.. மொத்த பழியையும் பாக்கியா மீது போடும் மாமி

ஆனால் இவர் வில்லத்தனத்தையும், பணக்கார ஆதிக்கத்தை செலுத்தும் விதமாக நெகட்டிவ் கேரக்டராக தான் தெரிகிறது. அடுத்தபடியாக நாச்சியப்பனை எப்படியாவது தன் பக்கம் இழுத்து விட வேண்டும் என்று அவருடைய அம்மா கொஞ்சம் கொஞ்சமாக பேசி அவரை திசை திருப்புகிறார். அதற்கு ஏற்ற மாதிரி அம்மாவின் பேச்சைக் கேட்டு நாச்சியப்பன் மௌனமாக இருக்கிறார்.

இதில் ஜனனியின் அம்மா, எவ்வளவோ கஷ்டங்கள் வந்தாலும் அவமானத்தை சந்தித்து தனியாகத்தான் வாழ்ந்தோமே தவிர உங்களிடம் வந்து எந்த உதவியும் கேட்காதவர் இப்ப மட்டும் வந்துருவாரா என்ன என்று கேட்கிறார். தன் கணவரை கையைப் பிடித்துக் கொண்டு ஜனனி அம்மா கூப்பிடுகிறார். ஆனால் நாச்சியப்பன் அவர் குடும்பத்தின் பக்கத்தில் தான் இருக்கிறாரே தவிர மனைவி பக்கம் போவதாக தெரியவில்லை.

ஒருவேளை இத்தனை நாள் குடும்பத்தில் பட்ட கஷ்டங்களையும், அவமானங்களையும் வெறுத்து தன் பிறந்த குடும்பத்துடன் சேரலாம் என்று நினைக்கிறாரோ என்னமோ. அது மட்டுமில்லாமல் காசு பணம் இல்லாமல் எந்த அளவுக்கு அவமானத்தை சந்தித்திருக்கிறோம் என்று முடிவு பண்ணி இனிமேல் தன்னுடைய அம்மா குடும்பத்துடைய இருந்து விடலாம் என்று ஒட்டிக் கொள்ளப் போகிறார். இதனை அடுத்து தான் ஒவ்வொரு எபிசோடும் ஜனனி சக்தி மூலம் சூடு பிடிக்கப் போகிறது.

Also read: பணக்கார மருமகளுக்கு சேவகம் பார்க்கும் விஜயா.. வேலைக்காரியாக மாறிய மீனா, ரோகிணி எடுத்த முடிவு

Trending News