சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

சமந்தாவை பற்றி பேசி உருகிய நாக சைதன்யா.. விவாகரத்தின் உண்மை காரணம் இதுதானாம்!

நடிகர் நாக சைதன்யா, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கஸ்டடி என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் மே 12ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவான படம் இது. மேலும் நாக சைதன்யாவிற்கு இதுதான் முதல் நேரடி திரைப்படம். இந்த படத்தில் இவர் போலீஸ் கேரக்டரில் நடித்த வருகிறார். சமீபத்தில் வெளியான கஸ்டடி படத்தின் டீசர் வீடியோ ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

தற்போது கஸ்டடி படக்குழு, படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் முழு வீச்சில் இறங்கியுள்ளது. நடிகர் நாகசைத்தன்யாவும் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அப்போது கேட்கப்படும் பல கேள்விகளுக்கு மனம் திறந்து பதில் அளித்து இருக்கிறார் இவர். அப்படி சமீபத்திய பேட்டி ஒன்றில் அவருடைய முன்னாள் மனைவியும் பிரபல நடிகையுமான சமந்தா பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு ரொம்பவும் வெளிப்படையாக பதில் அளித்திருக்கிறார் சைதன்யா.

Also Read:ஒரு தடவை உண்மைக்காக நின்னு பாரு உன் லைஃபே மாறும்.. வெங்கட் பிரபுவின் கஸ்டடி ஆட்டம் ஆரம்பம்

நடிகர் நாகசைதன்யாவும், நடிகை சமந்தாவும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் என இயக்கத்தில் வெளியான ஏ மாயம் சேசாவே என்னும் திரைப்படத்தில் முதன் முதலில் இணைந்து நடித்தனர். அதன் பின்னர் நல்ல நண்பர்களாக பழகி வந்த இவர்கள் இருவரும் காதலிக்க தொடங்கினர். நீண்ட வருட காதலர்களாக இருந்த இவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

தென்னிந்திய சினிமா உலகின் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்த இவர்கள் நடிப்பிலும் கவனம் செலுத்தி வந்தனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021 ஆம் ஆண்டு இருவரும் மனமொத்து பிரிவதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தனர். இது ரசிகர்களிடையே மிகப் பெரிய அதிர்ச்சி செய்தியாக அமைந்தது. கடந்த ஆண்டு இவர்கள் இருவருக்கும் அதிகாரப்பூர்வமாக விவாகரத்தும் கிடைத்துவிட்டது.

Also Read:மீண்டும் மங்காத்தா ஆட வரும் வெங்கட் பிரபு.. கஸ்டடி படத்தின் ஒன்லைன் ஸ்டோரி இதுதான்!

இதற்கிடையில் தான் அந்த பேட்டியில் நடிகர் நாக சைதன்யா. சமந்தா பற்றி பேசும் பொழுது சமந்தா மிகவும் இனிய நண்பர், அனைத்து விதமான சந்தோஷத்திற்கும் தகுதியானவர் அவர் மீது எனக்கு மிகவும் மரியாதை இருக்கிறது, எங்கள் பிரிவுக்கும் நான் எப்பொழுதும் மரியாதை தருகிறேன், எங்கள் பிரிவுக்கு யாரோ ஒரு மூன்றாவது நபரை காரணம் கூறுவது தவறான விஷயம் என்று கூறி இருக்கிறார்.

மேலும் அவர் மீடியாக்களில் வந்த வதந்திகளால் தான் எங்களுக்குள் முதலில் பிரச்சனை ஏற்பட ஆரம்பித்தது என்றும், எங்கள் மீதான மக்களின் பார்வையில் மரியாதை குறைந்ததற்கும் மீடியா தான் காரணம் என்றும் சொல்லி இருக்கிறார். விவாகரத்திற்கு பிறகும் இருவரும் நல்ல நண்பர்களாகவே இருப்போம் என்று சமந்தா நாக சைதன்யாவிடம் கூறியிருந்ததையும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

Also Read:தமிழில் கல்லா கட்டுமா? வெங்கட் பிரபு, நாக சைத்தன்யா கூட்டணி.. கஸ்டடி டீசர் எப்படி இருக்கு.?

 

Trending News