வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மீண்டும் மங்காத்தா ஆட வரும் வெங்கட் பிரபு.. கஸ்டடி படத்தின் ஒன்லைன் ஸ்டோரி இதுதான்!

மாநாடு திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு, தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை வைத்து கஸ்டடி என்னும் திரைப்படத்தை ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி, சரத்குமார், பிரேம்ஜி அமரன், அரவிந்த்சாமி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர்கள் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவருமே இணைந்து இசை அமைத்திருக்கிறார்கள்.

தெலுங்கில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நாகசைதன்யா முதன் முதலில் நேரடி தமிழ் படத்தில் நடிப்பது கஸ்டடியில் தான். மேலும் இந்த படத்தில் தான் முதன் முதலில் இவர் போலீஸ் வேடத்திலும் நடிக்கிறார். வெங்கட் பிரபுவின் படம் என்றாலே எப்போதுமே கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது. அதிலும் மாநாடு திரைப்படத்தில் இவர் வைத்த லூப் என்னும் ட்விஸ்ட் அடுத்தடுத்து இவர் படங்களின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களுக்கு அதிகமாக ஏற்றி இருக்கிறது.

Also Read:தமிழில் கல்லா கட்டுமா? வெங்கட் பிரபு, நாக சைத்தன்யா கூட்டணி.. கஸ்டடி டீசர் எப்படி இருக்கு.?

ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆக இருக்கும் இந்த படம் டீசரிலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிட்டது. வரும் 12ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் கஸ்டடி திரைப்படத்தின் பிரமோஷன் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் நடந்த சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளின் ஐபிஎல் போட்டியில் கூட கலந்து கொண்டு இந்த படக் குழு பிரமோஷன் செய்தது.

பொதுவாகவே ஒரு படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு அந்தப் படத்தின் கதையையோ, அல்லது மையக் கருத்து என்ன என்பதையோ படக்குழு சொல்ல மாட்டார்கள். அதற்கு காரணம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறைந்துவிடும் என்பதற்காக தான். ஆனால் எதிலும் வித்தியாசம் காட்டும் வெங்கட் பிரபு இந்த படத்தின் ஒன்லைன் ஸ்டோரியை இப்பொழுது சொல்லியே படத்தின் மீதான எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறார்.

Also Read:சிம்புவின் சினிமா கேரியரை க்ளோஸ் பண்ண 5 படங்கள்.. மீண்டும் வாழ்வு கொடுத்த வெங்கட் பிரபு

ஒரு படத்தில் ஹீரோ மற்றும் வில்லனின் வேலையே ஒருவரை ஒருவர் தாக்கி கொள்வது அல்லது அழிக்க வேண்டும் என்று நினைப்பதுதான். ஆனால் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்த கஸ்டடி திரைப்படத்தில் வில்லனுக்கு எதுவும் ஆகாமல் அவரை உயிரோடு பார்த்துக் கொள்வது மட்டுமே ஹீரோவின் வேலையாம். இப்படி ஒரு ஒன்லைனை சொல்லி வெங்கட் பிரபு ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறார்.

வில்லனை பாதுகாக்கும் ஹீரோ என்பது கொஞ்சம் புதுசான கதை தான். இதற்குப் பின்னால் இருக்கும் காரணம் தான் கண்டிப்பாக வழக்கம் போல் வெங்கட் பிரபுவின் கதையாக சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாகசைதன்யா இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் இந்த கஸ்டடி தான். மேலும் இந்த படத்தில் பிரியாமணி கெஸ்ட்ரோலில் வருகிறார்.

Also Read:வெங்கட் பிரபுவின் தாராள மனசுக்கு வந்த சிக்கல்.. உதவி இயக்குனர்கள் வயிற்றில் அடித்த பரிதாபம்

Trending News