Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

படப்பிடிப்பில் தனுஷ், ரஜினி எப்படி.? நாகார்ஜுனா ஓபன் டாக்

படப்பிடிப்பில் தனுஷ், ரஜினி எப்படி.? நாகார்ஜுனா ஓபன் டாக்

Nagarjuna : தோழா படத்திற்கு பிறகு மீண்டும் நாகர்ஜுனா தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். இப்போது ஜூன் மாதம் வெளியாக உள்ள குபேரா படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதேபோல் ரஜினியின் கூலி படத்திலும் வில்லனாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. […]

Nagarjuna : தோழா படத்திற்கு பிறகு மீண்டும் நாகர்ஜுனா தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். இப்போது ஜூன் மாதம் வெளியாக உள்ள குபேரா படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதேபோல் ரஜினியின் கூலி படத்திலும் வில்லனாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த இரு படங்களில் ஒற்றுமை என்னவென்றால் தனுஷ் மற்றும் ரஜினி இருவரின் கதாபாத்திரமும் தேவா. தனது முன்னாள் மாமனார் ரஜினியின் சாயல் தனுஷின் பல படங்களில் இருந்திருக்கிறது. மேடை பேச்சுகளிலும் ரஜினியை போல தான் பேசுவார்.

இப்போது ஐஸ்வர்யா, தனுஷ் இருவரும் ஒன்றாக இல்லை என்றாலும் தனது மகன்களின் விழாக்களில் கலந்து கொள்வது ரஜினிக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. இந்த சூழலில் இருவரின் படங்களிலும் நாகர்ஜுனா ஒரே சமயத்தில் பயணித்திருக்கிறார்.

ரஜினி மற்றும் தனுஷ் பற்றி பேசிய நாகார்ஜுனா

அவர் கூறும் போது தனுஷ் படப்பிடிப்பில் மிகவும் சீரியஸாக இருப்பார். ஏனென்றால் அவரது கதாபாத்திரம் அது போன்று இருப்பதால் படப்பிடிப்பிலும் மிகவும் சீரியஸாக நடந்து கொள்வார். ஆனால் ரஜினி அப்படியே ஆப்போசிட்டாக இருப்பாராம்.

சண்டை காட்சிகள் எடுக்கும் போது தான் சீரியஸாக இருப்பாராம். மற்ற சமயங்களில் ஜாலியாகவும், பிறரை கிண்டலடித்துக் கொண்டு இருப்பார். இருவருக்கும் இந்த வித்தியாசம் படப்பிடிப்பில் இருந்ததாக நாகர்ஜுனா கூறியிருக்கிறார்.

மேலும் குபேரா படம் விரைவில் வெளியாக உள்ளதால் நாளை இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அகமதாபாத் விமான விபத்து காரணமாக இவ்விழா ரத்து செய்யப்பட்ட நிலையில் ட்ரெய்லர் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.