திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

தம்பி ஓரமா போங்க! சிவாஜி, கமலுக்கு முன்னாடியே 12 கெட்டப் போட்ட வில்லன் நடிகர்

தமிழ் சினிமாவை பொறுத்தவரை அதிக கெட்டப்புகள் போட்டு நடித்த பெருமைக்குரியவர் கமல்ஹாசன் என்பது நமக்கு நன்றாக தெரியும். அவர் நடிப்பில் வெளிவந்த தசாவதாரம் திரைப்படத்தில் அவர் நம்மையெல்லாம் பிரம்மிக்க வைக்கும் அளவுக்கு 10 விதமான கெட்டப்புகள் போட்டு அசத்தியிருப்பார்.

அந்த படத்தின் டைட்டில் கார்டில் கூட முதன்முதலில் பத்து கெட்டப்புகளில் கமல் என்றுதான் போட்டிருப்பார்கள். அவருக்கு முன்பே தமிழ் சினிமாவின் ஜாம்பவான் சிவாஜி கணேசன் நவராத்திரி என்ற திரைப்படத்தில் ஒன்பது கெட்டப்புகள் போட்டு கலக்கி இருப்பார்.

அப்போது அவரின் அந்த மாறுபட்ட கதாபாத்திரங்கள் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. சொல்லப்போனால் இவர்கள் இருவரும் தான் இப்போது வரை தமிழ் சினிமாவில் அதிக கெட்டப்புகள் போட்டு நடித்த நடிகர்களாக இருந்து வருகின்றனர்.

ஆனால் அவர்களுக்கு முன்னரே உங்களுக்கெல்லாம் நான் தான் குரு என்பதைப்போல எம் என் நம்பியார் ஒரு திரைப்படத்தில் 12 கெட்டப்புகள் போட்டு அசத்தி இருக்கிறார். டி என் சுந்தரம் இயக்கத்தில் 1950 ஆம் ஆண்டு வெளிவந்த திகம்பர சாமியார் என்ற திரைப்படம் தான் அது.

அந்த திரைப்படத்தில் எம் என் நம்பியார், வி கே ராமசாமி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருப்பார்கள். அதுவரை தமிழில் வில்லன் வேடங்களில் கலக்கி வந்த நம்பியார் இந்த திரைப்படத்தில் பல கெட்டப்புகள் போட்டு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார்.

மேலும் அந்த கதாபாத்திரங்கள் அனைத்தும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. இதனால் அந்த திரைப்படம் வசூலிலும் நல்ல லாபம் பார்த்தது. அந்த வகையில் கமல், சிவாஜி இருவருக்கும் முன்பே நம்பியார் பல கெட்டப்புகள் போட்டு நடித்திருப்பது பலருக்கும் புதிய தகவலாக இருக்கிறது.

Trending News