திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

சொந்த காசுல சூனியம் வைக்க முடியாது.. திடீர் முடிவெடுத்த நயன்தாரா, விக்னேஷ் சிவன்

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தங்களின் ரவுடி பிக்சர்ஸ் மூலம் தயாரித்துள்ள காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் இன்னும் சில நாட்களில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா என்று பெரிய நட்சத்திரங்கள் நடிப்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது.

அதை அதிகரிக்கும் விதமாக படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சிகளும், டிரெய்லரும் வெளியாகி ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்துள்ளது. மேலும் படம் வெளியாக இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் படத்தை பிரமோஷன் செய்ய வேண்டாம் என்று நயன்தாரா திடீர் முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இப்போதெல்லாம் ஒரு படத்தை மிகப்பெரிய அளவில் பிரமோஷன் செய்தால் மட்டுமே அதிக லாபம் பார்க்க முடிகிறது. அதனால்தான் பல தயாரிப்பாளர்களும் தங்கள் படங்களை மிகப்பெரிய அளவில் பணத்தை கொட்டி பிரமோஷன் செய்து வருகின்றனர்.

ஆனால் நயன்தாராவோ அதற்கு நேர்மாறாக பணத்தை செலவு செய்ய வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறாராம். ஏனென்றால் படத்தின் பட்ஜெட்டே கொஞ்சம் அதிகமாக இருந்த நிலையில் புரமோஷனுக்கு என்று தனியாக செலவு செய்ய வேண்டாம் என்று அவர் நினைக்கிறாராம்.

மேலும் மிகப்பெரிய அளவில் பிரமோஷன் செய்யப்பட்ட பல படங்கள் தோல்வியை சந்தித்திருக்கிறது. இந்த படத்திற்கும் அப்படி ஒரு நிலைமை வந்துவிட வேண்டாம் என்ற பயமும் நயன்தாராவிற்கு இருக்கிறது. ஏனென்றால் படத்தின் கதை கொஞ்சம் ஏடாகூடமாக இருப்பதும் அதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் தனது சொந்தத் தயாரிப்பில் மட்டும் விளம்பரத்திற்கு நயன்தாரா, விக்னேஷ் சிவன் கலந்து கொண்டால் மிகப்பெரிய பிரச்சினை வரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமில்லை. இதை தவிர்ப்பதற்காக மட்டுமே நயன்தாரா புரமோஷனுக்கு வர மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

தற்போது வெளியாகியுள்ள இந்தப் படத்தின் ட்ரைலரில் டபுள் மீனிங் வசனங்களும், முந்தைய படத்தின் சாயல்களும் அதிக அளவில் இருக்கிறது. அதனால் மக்கள் இதை எந்த அளவுக்கு ஏற்றுக் கொள்வார்கள் என்கிற பயம் நயன்தாராவுக்கு இருக்கிறது.

அதனால் தான் அவர் தற்போது சில நடிகர்களை வைத்து சோசியல் மீடியாவிலேயே படத்தை விளம்பரம் செய்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்துள்ளார். வரிசையாக தோல்வி படங்களை கொடுத்து வரும் நயன்தாராவுக்கும், விஜய் சேதுபதிக்கும் இந்தப்படம் வெற்றியை கொடுக்குமா இல்லையா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Trending News