ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

ஜீவா அப்பாவிடம் பயங்கரமா திட்டு வாங்கின நயன்தாரா.. படப்பிடிப்பு நிற்கும் நிலையில் இருந்த ஈ படம்

நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால், பல மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து தன்னை தமிழ் சினிமாவில் அங்கீகரித்துக் கொண்டவர்தான் நயன்தாரா. இந்நிலையில் ஈ படத்தின் படப்பிடிப்பில் இவருக்கு நடந்த சம்பவம் தற்போது ஆச்சரியத்தை உண்டாக்கி வருகிறது.

ஒரு காலகட்டத்தில் மலையாள சினிமாவின் மூலம் அறிமுகமானவர் தான் நயன்தாரா. அதன்பின் தமிழில் நடிக்க ஆரம்பித்த இவர் அடுத்தடுத்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அவ்வாறு 2006ல் எஸ் பி ஜனநாதன் இயக்கத்தின் வெளிவந்த படம் தான் ஈ.

Also Read: போலீஸ் வரை சென்று அசிங்கப்பட்ட 5 நடிகர்களின் மனைவிகள்.. நயன்தாராவை அடித்த பிரபுதேவாவின் மனைவி

இப்படத்தில் ஜீவா மற்றும் நயன்தாரா நடித்திருப்பார்கள். மேலும் இப்படத்தை ஜீவாவின் தந்தையான ஆர் பி சௌத்ரி தயாரிப்பை மேற்கொண்டு இருப்பார். இந்த காலகட்டத்தில் தான் நயன்தாராவிற்கும் சிம்புவிற்கும் இடையே காதல் இருந்து வந்தது.

இதைத் தொடர்ந்து ஈ படப்பிடிப்பின் போது, நயன்தாரா ஷூட்டிங்கிற்கு சரியாக வராமல் இருந்திருக்கிறார். மேலும் அப்படியே வந்தாலும் போனும் கையுமாகவே எந்நேரமும் சிம்புவுடன் சிரித்து, அல்லது அழுது பேசி வருவாராம். அதை அறிந்தும் அறியாத மாதிரி இருந்து வந்திருக்கிறார் ஆர் பி சௌத்ரி.

Also Read: நயன்தாராவை ஓரம் கட்ட நினைத்த நடிகை.. கரியை பூசி அனுப்பிய 3 இயக்குனர்

ஒரு கட்டத்தில் இவர்களின் காதலை அறிந்து பிறகு கோபம் கொண்ட இயக்குனர் தன் படப்பிடிப்பு தாமதம் ஆகுவதால் நயன்தாராவை குற்றம் சாற்றி இருக்கிறார். மேலும் அவரிடம் உங்களால் இப்படத்தை முடித்து தர முடியுமா, முடியாதா என்று கேட்டிருக்கிறார்.அவ்வாறு உங்களால் முடியாது என்றால் பரவாயில்லை. இனி நான் நடப்பதை பார்த்துக் கொள்கிறேன் என்று சவால் விட்டிருக்கிறார். இது நயன்தாராவுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏனென்றால் அக்காலக் கட்டத்தில் தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளில் பிரபல தயாரிப்பாளராக இருந்தவர் தான் ஆர் பி சௌத்ரி. இவர் இவ்வாறு கூறியதால் பயம் கொண்டு படத்தினை முடித்து கொடுத்தாராம் நயன்தாரா. மேலும் லேடி சூப்பர் ஸ்டார் ஆன இவரை பற்றிய இத்தகைய சம்பவம் மக்களுக்கு புது தகவலாக இருந்து வருகிறது.

Also Read: நயன்தாரா, சமந்தா இடத்தை பிடிக்க வரும் அடுத்த ஹீரோயின்.. உலகளவில் அதிக படங்களில் நடிக்கும் நடிகை

- Advertisement -

Trending News