திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அடுத்தடுத்து பறிபோன பட வாய்ப்பால் வெளியேறும் விக்கி-நயன்.. வேறு வழியில்லாமல் எடுத்த அதிரடி முடிவு

நட்சத்திர தம்பதிகளான விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் இப்போது சினிமாவில் பெருத்தடி வாங்கி வருகிறார்கள். அதாவது நயன்தாராவுக்கு திருமணத்திற்கு பின் வெளியான படங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை. ஆகையால் தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குறைந்துவிட்டது.

இதனால் பாலிவுட் பக்கம் சென்ற நயன்தாரா ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் விக்னேஷ் சிவனும் அஜித்தின் ஏகே 62 பட வாய்ப்பு பறிபோனதால் எந்த ஹீரோவின் படத்தை இயக்குவது என தெரியாமல் திக்கு முக்காடி இருக்கிறார். மேலும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவருக்குமே தற்போது தமிழ் சினிமாவில் மார்க்கெட் கம்மி தான்.

Also Read : ரஜினி, விஜய்க்கு நோ சொன்ன நயன்தாரா.. பணத்தாசையால் ஷாரூக்கானிடம் சரண்டர்!

இதனால் இனி மேலும் இதையே நம்பினால் வேலைக்கு ஆகாது என அதிரடி முடிவை இவர்கள் எடுத்துள்ளனர். அதாவது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் நிறைய படங்களை தயாரித்து வருகிறார்கள். அதன்படி இப்போது குஜராத் மொழியில் தங்களுடைய முதல் படத்தை தயாரித்து உள்ளனர்.

சுபயாத்ரா என்ற பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை தேசிய விருது பெற்ற மனிஷ் சைனி இயக்குகிறார். மேலும் இப்படத்தில் மல்ஹர் என்ற ஹீரோ முக்கிய ரோலில் நடிக்கிறார். இந்த படம் கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, ரித்திகா சிங் ஆகியோர் நடிப்பில் வெளியான ஆண்டவன் கட்டளை என்ற படத்தின் ரீமேக் ஆகும்.

Also Read : KH234 – த்ரிஷா, நயன்தாரா ஓரமா போங்க.. அஜித் பட ஹீரோயினை லாக் செய்த கமல்

ஆண்டவன் கட்டளை படம் தமிழில் வெளியான போதே ரசிகர்களிடம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தை குஜராத் மொழியில் ரீமேக் செய்து கல்லா கட்ட நயன்தாரா, விக்னேஷ் சிவன் முடிவெடுத்து இருந்தனர். இந்த படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்து தொடர்ந்து குஜராத் மொழியில் படம் தயாரிக்கலாமா என்ற முடிவை எடுக்க உள்ளனர்.

அதுமட்டுமின்றி நயன்தாரா மார்க்கெட் உள்ள போதே மும்பையில் நிறைய தொழில் தொடங்கி அதன் மூலம் கல்லா கட்டி வருகிறார். இதுபோல பல தொழில்களை கைவசம் வைத்துள்ள இவர்கள் தமிழ் சினிமாவில் பட வாய்ப்பு இல்லாததால் மற்ற மொழி படங்களை இனி தயாரிக்க உள்ளனர் என்று அவரது நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

Also Read : சினிமாவை தாண்டி பிசினஸில் கல்லா கட்டும் நயன்தாரா.. ஒரு வருடத்திற்கு இவ்வளவு கோடிகளில் வருமானமா?

Trending News