செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

த்ரிஷாவுக்கு ஆப்பு வச்ச நயன்.. அக்கா பேச்சை கேட்டு ஆளை மாத்தும் இயக்குனர்

Trisha: எனக்கு ஒரு கண்ணு போனாலும் பரவாயில்லை. என் எதிரிக்கு ரெண்டு கண்ணும் போகணும்னு சில பேர் நினைப்பாங்க. அந்த வகையை சேர்ந்தவர் தான் நடிகை நயன்தாரா. திரிஷா அவருக்கு சமகாலத்து போட்டியாளர் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது.

நயன் வருவதற்கு முன்பே தமிழ்நாட்டின் கனவுக்கன்னி ஆக த்ரிஷா இருந்தார். அவ்வப்போது சில நடிகைகள் வரும்பொழுது த்ரிஷாவின் மார்க்கெட் கொஞ்சம் தடுமாறும். இருந்தாலும் தன்னுடைய இடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டுதான் இருந்தார்.

ஆனால் நயன்தாராவின் வருகைக்குப் பிறகு த்ரிஷாவால் நம்பர் ஒன் இடத்தை காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. அடுத்தடுத்து நயன்தாரா முன்னணி ஹீரோக்களின் படங்களில் புக் ஆகிக்கொண்டே இருந்தார். தமிழ் சினிமாவில் திரிஷாவுக்கு வேலை இல்லாமல் போனது.

கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக எந்த பட வாய்ப்பு இல்லாமல் முடங்கி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு த்ரிஷாவின் ரேஞ்ச் வேற லெவலுக்கு மாறிவிட்டது. அதே நேரத்தில் திருமணத்திற்கு பிறகு நயன்தாராவின் சினிமா வாய்ப்புகள் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது.

ஜவான் பட வெற்றிக்குப் பிறகு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெரிய பட வாய்ப்பு எதுவும் நயன்தாராவுக்கு இல்லை. அப்படியே இந்த பக்கம் பார்த்தால் திரிஷா இல்லாத முன்னணி ஹீரோக்களின் படங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவருக்கு வாய்ப்பு குவிந்து கொண்டிருந்தது.

த்ரிஷாவுக்கு ஆப்பு வச்ச நயன்

அப்படித்தான் புஷ்பா 2 படத்திற்கு பிறகு அல்லு அர்ஜுன் நடிக்க இருக்கும் படத்தில் திரிஷா ஹீரோயினாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்த படத்தை இயக்குபவர் இயக்குனர் அட்லி. அட்லி மற்றும் நயன்தாராவுக்கு இடையேயான அக்கா தம்பி பாசம் ராஜா ராணி படத்தில் இருந்து தொடர்கிறது.

அவர் பாலிவுட்டுக்கு போகும்போது அப்படியே தன்னுடைய அக்காவையும் சேர்த்து கூட்டிக்கிட்டு போய் விட்டார். இப்போது அல்லு அர்ஜுன் படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க முடியாத சூழ்நிலை அவருக்கு இருக்கிறது. அதனால் தான் இப்போது டிரெண்டில் இருக்கும் த்ரிஷாவை நடிக்க வைத்த முடிவு செய்தார்.

ஆனால் திரிஷாவுக்கு அந்த வாய்ப்பை கொடுக்கக் கூடாது என அன்பு கட்டளை போட்டிருக்கிறார் நயன்தாரா. நேற்று மதியம் வரை த்ரிஷா தான் என 100 சதவீதம் தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வந்தன. ஆனால் சில மணி நேரங்களிலேயே அது மொத்தமாய் மாறிவிட்டது.

தான் நடிக்காவிட்டாலும் பரவாயில்லை திரிஷா அந்த படத்தில் நடிக்க கூடாது என்பதில் நயன்தாரா உறுதியாக இருக்கிறார். தன்னுடைய சமீபத்திய தோழியான சமந்தாவுக்கு அந்த வாய்ப்பை கொடுக்குமாறு பரிந்துரைத்திருப்பதாக தெரிகிறது. மேலும் சமந்தா இல்லை என்றால் ஆலியா பட் அந்த படத்தில் நடிப்பதற்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

Trending News